திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1287

நான்காம் தந்திரம்9. ஏரொளிச் சக்கரம்

தொடர்ந்து படிக்கread this section continuously

கூடிய தம்பன மாரணம் வசியமாடியல் பாக வமைந்து செறிந்திடும்பாடியுள் ளாகப் பகைவரும் வந்துறார்தேடியுள் ளாகத் தெளிந்துகொள் வார்க்கே.

உரை

பாடல் #1286 இல் உள்ளபடி, ஏரொளிச் சக்கரத்திலிருந்து மேலெழுந்து ஒன்றாகக் கூடியிருக்கும் தம்பனம், மாரணம், வசியம் முதலிய பல வகைப்பட்ட மந்திரங்களும், அவற்றின் இயல்புக்கேற்பவே ஏரொளிச் சக்கரத்துடன் அமைந்து செழிப்பான சக்தி வடிவமாக உருவாகும் என்று பாடல் கூறுகிறது. இந்தச் சக்தி வடிவம், சாதகரின் உடலுக்கு வெளியில் இருக்கும் ஐந்து பூதங்களின் மூலம் வரும் எவ்வித இடையூறுகளும் சாதகரின் உடலுக்குள் புகுந்து பாதிப்பு ஏற்படுத்தாதவாறு காக்கும் என்றும், இந்த நிலை ஏரொளிச் சக்கரத்தின் இயல்புகளைத் தமக்குள்ளேயே தேடித் தெளிவு பெற்றவர்களுக்கே கிடைக்கும் என்றும் பாடல் உரைக்கிறது.

வரி வாரியாக

  • வரி 1

    பாடல் #1286 இல் உள்ளபடி, ஏரொளிச் சக்கரத்திலிருந்து மேலெழுந்து ஒன்றாகக் கூடியிருக்கும் தம்பனம், மாரணம், வசியம் முதலிய பல வகைப்பட்ட மந்திரங்களும் உள்ளன என்று பாடல் கூறுகிறது.

  • வரி 2

    இவை அவற்றின் இயல்புக்கேற்பவே ஏரொளிச் சக்கரத்துடன் அமைந்து செழிப்பான சக்தி வடிவமாக உருவாகும்.

  • வரி 3

    இந்தச் சக்தி வடிவம், சாதகரின் உடலுக்கு வெளியில் இருக்கும் ஐந்து பூதங்களின் மூலம் வரும் எவ்வித இடையூறுகளும் சாதகரின் உடலுக்குள் புகுந்து பாதிப்பு ஏற்படுத்தாதவாறு காக்கும் என்று பாடல் உரைக்கிறது.

  • வரி 4

    இந்த நிலை ஏரொளிச் சக்கரத்தின் இயல்புகளைத் தமக்குள்ளேயே தேடித் தெளிவு பெற்றவர்களுக்கே கிடைக்கும் என்று பாடல் கூறுகிறது.

திருமந்திரம் பாடல் #1287

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout