திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1286

நான்காம் தந்திரம்9. ஏரொளிச் சக்கரம்

தொடர்ந்து படிக்கread this section continuously

மதித்திடு மம்மையு மாமாது மாகும்மதித்திடு மம்மையு மங்கன லொக்கும்மதித்தங் கெழுந்தவை காரண மாகில்கொதித்தங் கெழுந்தவை கூடகி லாவே.

உரை

பாடல் #1285 இல் உள்ளபடி, ஏரொளிச் சக்கரத்திற்கான சாதகத்தை இடைவிடாது தொடர்ந்து செய்யும் சாதகர்களுக்குள்ளிருந்து இயங்கும் சக்தியே அண்ட சராசரங்களில் இருக்கும் பராசக்தியாகவும் இருக்கிறது என்று பாடல் கூறுகிறது. இந்தச் சக்தியே சாதகர்களுக்குள் இருக்கும் மூலாக்கினிக்குச் சமமாக இருக்கிறது. அதனால் சாதகருக்குள்ளிருந்து மேலெழுந்த ஏரொளிச் சக்கரம், பாடல் #1285 இல் உள்ளபடி ஐந்து பூதங்களுக்கும், பாடல் #1277 இல் உள்ளபடி அண்ட சராசரங்களுக்கும் விரிவடையும் மந்திர ஒலிகளுக்கும், இவை அனைத்திற்கும் மூலகாரணமாக இருக்கிறது. அதனால் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கும் மூலாக்கினியும் வீறுகொண்டு எழுந்து, மூலாதாரத்திலிருந்து மேலேறி வரும் அனைத்தினாலும் சாதகரின் உடலுக்கும் உலகத்திற்குமான தொடர்புகளை அறுக்கிறது என்று பாடல் உரைக்கிறது.

வரி வாரியாக

  • வரி 1

    பாடல் #1285 இல் உள்ளபடி, ஏரொளிச் சக்கரத்திற்கான சாதகத்தை இடைவிடாது தொடர்ந்து செய்யும் சாதகர்களுக்குள்ளிருந்து இயங்கும் சக்தியே அண்ட சராசரங்களில் இருக்கும் பராசக்தியாகவும் இருக்கிறது என்று பாடல் கூறுகிறது.

  • வரி 2

    இந்தச் சக்தியே சாதகர்களுக்குள் இருக்கும் மூலாக்கினிக்குச் சமமாக இருக்கிறது.

  • வரி 3

    அதனால் சாதகருக்குள்ளிருந்து மேலெழுந்த ஏரொளிச் சக்கரம், பாடல் #1285 இல் உள்ளபடி ஐந்து பூதங்களுக்கும், பாடல் #1277 இல் உள்ளபடி அண்ட சராசரங்களுக்கும் விரிவடையும் மந்திர ஒலிகளுக்கும் மூலகாரணமாக இருக்கிறது.

  • வரி 4

    அதனால் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கும் மூலாக்கினியும் வீறுகொண்டு எழுந்து, மூலாதாரத்திலிருந்து மேலேறி வரும் அனைத்தினாலும் சாதகரின் உடலுக்கும் உலகத்திற்குமான தொடர்புகளை அறுக்கிறது என்று பாடல் உரைக்கிறது.

திருமந்திரம் பாடல் #1286

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout