தொடர்ந்து படிக்கread this section continuously
அறிந்திடும் சக்கர மாதி யெழுத்துவிரிந்திடும் சக்கர மேலெழுத் தம்மைபரிந்திடும் சக்கரம் பாரங்கி நாலும்குவிந்திடும் சக்கரம் கூறலு மாமே.
உரைmeaning
பாடல் #1283 இல் உள்ளபடி, பரம்பொருளான இறைவனைத் தமக்குள் அறிந்துகொண்ட சாதகர்களால், ஏரொளிச் சக்கரத்தின் சக்தி வடிவங்களுள் மூல மந்திரமான ஓங்காரத்தின் முதல் எழுத்தாகிய அகாரத்தில் இறைவனும், இரண்டாம் எழுத்தான உகாரத்தில் இறைவியும், மூன்றாம் எழுத்தாகிய மகாரத்தில் நிலம், நீர், காற்று, அக்னி ஆகிய நான்கு பூதங்களும் ஒன்றாகக் குவிந்திருப்பதை அறிந்துணர்ந்து, அதை மற்றவர்களுக்கும் எடுத்துக் கூற முடியும்.
As in verse #1283, sadhakas who have come to know the Supreme Being within themselves can, among the power-forms of the Erolich Chakra, know and realize that in the a-sound, the first letter of the root mantra Om, God dwells; in the u-sound, the second letter, the Goddess dwells; and in the m-sound, the third letter, the four elements of earth, water, air and fire stand gathered together as one, and they are able to declare this to others as well.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
பாடல் #1283 இல் உள்ளபடி, பரம்பொருளான இறைவனைத் தமக்குள் அறிந்துகொண்ட சாதகர்களால் ஏரொளிச் சக்கரத்தின் சக்தி வடிவங்களை உணரமுடியும்.
As in verse #1283, sadhakas who have come to know the Supreme Being within themselves can perceive the power-forms of the Erolich Chakra.
- வரி 2Line 2
மூல மந்திரமான ஓங்காரத்தின் முதல் எழுத்தாகிய அகாரத்தில் இறைவனும், இரண்டாம் எழுத்தான உகாரத்தில் இறைவியும் இருப்பதை அறிந்துணர்கிறார்கள்.
They know and realize that in the a-sound, the first letter of the root mantra Om, God dwells, and in the u-sound, the second letter, the Goddess dwells.
- வரி 3Line 3
மூன்றாம் எழுத்தாகிய மகாரத்தில் நிலம், நீர், காற்று, அக்னி ஆகிய நான்கு பூதங்களும் ஒன்றாகக் குவிந்திருப்பதை அறிந்துணர்கிறார்கள்.
They realize that in the m-sound, the third letter, the four elements of earth, water, air and fire stand gathered together as one.
- வரி 4Line 4
இதை அறிந்துணர்ந்த சாதகர்கள் மற்றவர்களுக்கும் இதை எடுத்துக் கூற முடியும்.
Sadhakas who realize this are able to declare it to others as well.
திருமந்திரம் பாடல் #1284





