திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1283

நான்காம் தந்திரம்9. ஏரொளிச் சக்கரம்

தொடர்ந்து படிக்கread this section continuously

பார்க்கலு மாகும் பகையறு சக்கரங்காக்கலு மாகுங் கருத்திற் றடமெங்கும்நோக்கலு மாகு நுணுக்கற்ற நுண்பொருள்ஆக்கலு மாகு மறிந்துகொள் வார்க்கே.

உரை

பாடல் #1282 இல் உள்ளபடி, சாதகர்கள் தரிசிக்கும் மந்திரத்தின் ஒளி வடிவமாகிய ஏரொளிச் சக்கரமே, உலகத்திற்கும் உடலுக்குமான பந்தங்களாகிய பசி, தூக்கம், சோர்வு முதலிய இயற்கை உபாதைகளை அறுக்கின்றது என்று பாடல் கூறுகிறது. மேலும் சாதகர்கள் இந்த உலகத்திலேயே தங்கள் உடலை நீண்டகாலம் பாதுகாக்க முடியும் என்றும், தங்கள் எண்ணங்கள் செல்லும் அனைத்து இடங்களையும் தாங்கள் அமர்ந்திருக்கும் இடத்திலிருந்தே காண முடியும் என்றும், ஆராய்ந்தும் அறிந்துகொள்ள முடியாத அளவிற்கு நுண்ணியதும் பெரியதும் என்கிற அளவுகளே இல்லாத மிக அதிநுட்பமான பொருளாக இருக்கும் இறைவனையும் தமக்குள் அறிந்துகொள்ள முடியும் என்றும் பாடல் உரைக்கிறது. ஏரொளிச் சக்கரத்தைத் தமக்குள்ளிருந்து மேல்நோக்கி எழச்செய்து அதன் ஒளி வடிவைத் தரிசித்த சாதகர்களால்தான் இவை அனைத்தும் இயலும் என்று பாடல் கூறுகிறது.

வரி வாரியாக

  • வரி 1

    பாடல் #1282 இல் உள்ளபடி, சாதகர்கள் தரிசிக்கும் மந்திரத்தின் ஒளி வடிவமாகிய ஏரொளிச் சக்கரமே, உலகத்திற்கும் உடலுக்குமான பந்தங்களாகிய பசி, தூக்கம், சோர்வு முதலிய இயற்கை உபாதைகளை அறுக்கின்றது என்று பாடல் கூறுகிறது.

  • வரி 2

    மேலும் சாதகர்கள் இந்த உலகத்திலேயே தங்கள் உடலை நீண்டகாலம் பாதுகாக்க முடியும் என்று பாடல் உரைக்கிறது.

  • வரி 3

    தங்கள் எண்ணங்கள் செல்லும் அனைத்து இடங்களையும் தாங்கள் அமர்ந்திருக்கும் இடத்திலிருந்தே காண முடியும் என்று பாடல் கூறுகிறது.

  • வரி 4

    ஆராய்ந்தும் அறிந்துகொள்ள முடியாத அளவிற்கு நுண்ணியதும் பெரியதும் என்கிற அளவுகளே இல்லாத மிக அதிநுட்பமான பொருளாக இருக்கும் இறைவனையும் தமக்குள் அறிந்துகொள்ள முடியும் என்றும், இவை அனைத்தும் ஏரொளிச் சக்கரத்தை மேல்நோக்கி எழச்செய்து அதன் ஒளி வடிவைத் தரிசித்த சாதகர்களால்தான் இயலும் என்றும் பாடல் கூறுகிறது.

திருமந்திரம் பாடல் #1283

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout