திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1282

நான்காம் தந்திரம்9. ஏரொளிச் சக்கரம்

தொடர்ந்து படிக்கread this section continuously

உன்னிட்ட வட்டத்தி லொத்தெழு மந்திரம்பின்னிட்ட ரேகை பிழைப்பது தானில்லைதன்னிட் டெழுந்த தகைப்பறப் பின்னிற்கப்பன்னிட்ட மந்திரம் பார்க்கலு மாமே.

உரை

பாடல் #1281 இல் உள்ளபடி, தியானப் பொருளாக உள்ளிருந்து பிணைத்திருக்கும் ஓம் எனும் பிரணவமே, வெளிச்சத்திற்கும் ஓசைக்கும் உள்ளிருக்கும் எரியும் நெருப்பு வட்டத்துடன் ஒன்றாகச் சேர்ந்து எழும் மந்திரங்கள் நிலைத்து நிற்பதால், சக்கர வடிவத்திற்கு ஏற்பப் பின்னிப் பிணைந்திருக்கும் கோடுகள் நிலைத்து நிற்காமல் தாமாகவே மறைந்துவிடும். நெருப்பு வட்டத்திலிருந்து தானாகவே வெளிப்பட்டு எழும் மந்திரம் தளர்ச்சியின்றிச் சக்கரத்திற்குப் பின்னால் நிலையாக நிற்கும். அப்போது தானாகவே முறைப்படுத்திக்கொண்டு நிலையாக நிற்கும் அந்த மந்திரத்தை ஒளி வடிவமாகத் தரிசிக்க முடியும்.

வரி வாரியாக

  • வரி 1

    பாடல் #1281 இல் உள்ளபடி, தியானப் பொருளாக உள்ளிருந்து பிணைத்திருக்கும் ஓம் எனும் பிரணவமே, வெளிச்சத்திற்கும் ஓசைக்கும் உள்ளிருக்கும் எரியும் நெருப்பு வட்டத்துடன் ஒன்றாகச் சேர்ந்து எழும் மந்திரங்கள் நிலைத்து நிற்கச் செய்கிறது.

  • வரி 2

    இதனால் சக்கர வடிவத்திற்கு ஏற்பப் பின்னிப் பிணைந்திருக்கும் கோடுகள் நிலைத்து நிற்காமல் தாமாகவே மறைந்துவிடும்.

  • வரி 3

    நெருப்பு வட்டத்திலிருந்து தானாகவே வெளிப்பட்டு எழும் மந்திரம் தளர்ச்சியின்றிச் சக்கரத்திற்குப் பின்னால் நிலையாக நிற்கும்.

  • வரி 4

    அப்போது தானாகவே முறைப்படுத்திக்கொண்டு நிலையாக நிற்கும் அந்த மந்திரத்தை ஒளி வடிவமாகத் தரிசிக்க முடியும்.

திருமந்திரம் பாடல் #1282

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout