திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1281

நான்காம் தந்திரம்9. ஏரொளிச் சக்கரம்

தொடர்ந்து படிக்கread this section continuously

மந்திர சக்கர மானவை சொல்லிடிற்தந்திரத் துள்ளெழுத் தொன்றெரி வட்டமாதந்திரத் துள்ளு மிரேகையி லொன்றில்லைபந்தமு மாகும் பிரணவ முன்னிடே.

உரை

பாடல் #1280 இல் உள்ளபடி, மூல விதையாக இருக்கும் எழுத்துக்களே மந்திரங்களாகவும் சக்கரங்களாகவும் ஆகும் விதத்தைச் சொல்லப்போனால்: ஏரொளிச் சக்கரத்தின் மூலம் வெளிச்சமும் ஓசையும் வெளிப்பட்டு, அதுவே மூல விதையாக இருக்கும் வழிவகைக்குள் இருக்கும் எழுத்துக்களின் பலவிதமான ஒளி வடிவங்களில் ஒன்றிலிருந்து, எரியும் நெருப்பு மயமான ஒரு வட்டம் தோன்றுகிறது. இந்த வட்டத்திற்குள் இருக்கும் வடிவத்திற்கு ஏற்ற கோடுகளில் வெளிச்சத்தையும் ஓசையையும் ஒன்றாகப் பிணைக்கும் சக்தி வேறு எதுவும் இல்லை. ஓம் எனும் பிரணவத்தின் சக்தியே வெளிச்சத்திற்கும் ஓசைக்கும் உள்ளிருக்கும் தியானப் பொருளாக நின்று, இரண்டையும் பிணைத்து வைத்திருக்கிறது.

வரி வாரியாக

  • வரி 1

    பாடல் #1280 இல் உள்ளபடி, மூல விதையாக இருக்கும் எழுத்துக்களே மந்திரங்களாகவும் சக்கரங்களாகவும் ஆகும் விதத்தைச் சொல்லப்போனால், ஏரொளிச் சக்கரத்தின் மூலம் வெளிச்சமும் ஓசையும் வெளிப்படுகின்றன.

  • வரி 2

    அதுவே மூல விதையாக இருக்கும் வழிவகைக்குள் இருக்கும் எழுத்துக்களின் பலவிதமான ஒளி வடிவங்களில் ஒன்றிலிருந்து, எரியும் நெருப்பு மயமான ஒரு வட்டம் தோன்றுகிறது.

  • வரி 3

    இந்த வட்டத்திற்குள் இருக்கும் வடிவத்திற்கு ஏற்ற கோடுகளில் வெளிச்சத்தையும் ஓசையையும் ஒன்றாகப் பிணைக்கும் சக்தி வேறு எதுவும் இல்லை.

  • வரி 4

    ஓம் எனும் பிரணவத்தின் சக்தியே வெளிச்சத்திற்கும் ஓசைக்கும் உள்ளிருக்கும் தியானப் பொருளாக நின்று, இரண்டையும் பிணைத்து வைத்திருக்கிறது.

திருமந்திரம் பாடல் #1281

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout