திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1280

நான்காம் தந்திரம்9. ஏரொளிச் சக்கரம்

தொடர்ந்து படிக்கread this section continuously

விளைந்த வெழுத்தது விந்துவும் நாதம்விளைந்த வெழுத்தது சக்கர மாகவிளைந்த வெழுத்தவை மெய்யினு ணிற்கும்விளைந்த வெழுத்தவை மந்திர மாமே.

உரை

பாடல் #1279 இல் உள்ளபடி, அனைத்தையும் உருவாக்கியிருக்கும் மூல விதையாகிய எழுத்துக்களே மந்திர வெளிச்சமாகவும் (எழுத்து வடிவம்), மந்திர ஓசையாகவும் (ஒலி வடிவம்), சக்கரமாகவும் (எழுத்தும் ஓசையும் சேர்ந்த சக்கர வடிவம்) இருக்கின்றன. இதுவே தர்மவழியில் இயங்கும் உலகத்தின் அனைத்துச் செயல்களுக்கும் மூலகாரணமாக நின்று செயலாற்றுகிறது. இந்த மூல விதையாகிய எழுத்துக்களே அனைத்து மந்திரங்களாகவும் இருக்கின்றன.

வரி வாரியாக

  • வரி 1

    பாடல் #1279 இல் உள்ளபடி, அனைத்தையும் உருவாக்கியிருக்கும் மூல விதையாகிய எழுத்துக்களே மந்திர வெளிச்சமாகவும் (எழுத்து வடிவம்) இருக்கின்றன.

  • வரி 2

    அவையே மந்திர ஓசையாகவும் (ஒலி வடிவம்), சக்கரமாகவும் (எழுத்தும் ஓசையும் சேர்ந்த சக்கர வடிவம்) இருக்கின்றன.

  • வரி 3

    இதுவே தர்மவழியில் இயங்கும் உலகத்தின் அனைத்துச் செயல்களுக்கும் மூலகாரணமாக நின்று செயலாற்றுகிறது.

  • வரி 4

    இந்த மூல விதையாகிய எழுத்துக்களே அனைத்து மந்திரங்களாகவும் இருக்கின்றன.

திருமந்திரம் பாடல் #1280

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout