தொடர்ந்து படிக்கread this section continuously
விரையது விந்து விளைந்தன வெல்லாம்விரையது விந்து விளைந்த வுயிரும்விரையது விந்து விளைந்தவிஞ் ஞாலம்விரையது விந்து விளைந்தவன் றானே.
உரைmeaning
பாடல் #1278 இல் உள்ளபடி முக்திக்கு வழிகாட்டும் வித்தாக இருக்கும் ஏரொளிச் சக்கரத்தின் வெளிச்சத்திலிருந்தே அண்ட சராசரங்களில் உள்ள அனைத்தும் உருவாகியுள்ளன. அந்த வெளிச்சத்திலிருந்தே அனைத்து உயிர்களும் உருவாகியுள்ளன. அந்த வெளிச்சத்திலிருந்தே இந்த உலகங்களும் உருவாகியுள்ளன. ஏரொளிச் சக்கரத்தைத் தொடர்ந்து வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் சாதகர்களும் இந்த மூல விதையின் வெளிச்சத்திலிருந்தே உருவாகியிருக்கிறார்கள். குறிப்பு: அனைத்தையும் உருவாக்கும் மூல விதையாக சாதகருக்குள்ளிருந்து வெளிப்படும் ஏரொளிச் சக்கரத்தின் வெளிச்சம் இருந்தாலும், இவை அனைத்திற்கும் மூலகாரணமாக இருப்பது அசையாத சக்தியான இறைவனே ஆவான்.
As in verse #1278, everything that exists in the whole universe has come into being from the very light of the Erolich Chakra, which stands as the seed that guides toward liberation. All living beings have come into being from that very light. These worlds too have come into being from that very light. The sadhakas who continue to bring forth the Erolich Chakra have themselves come into being from the light of this root seed. Note: even though the light of the Erolich Chakra emerging from within the sadhaka stands as the root seed that brings forth everything, it is God, the unmoving power, who is the root cause behind all of it.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
பாடல் #1278 இல் உள்ளபடி முக்திக்கு வழிகாட்டும் வித்தாக இருக்கும் ஏரொளிச் சக்கரத்தின் வெளிச்சத்திலிருந்தே அண்ட சராசரங்களில் உள்ள அனைத்தும் உருவாகியுள்ளன.
As in verse #1278, everything that exists in the whole universe has come into being from the very light of the Erolich Chakra, which stands as the seed that guides toward liberation.
- வரி 2Line 2
அந்த வெளிச்சத்திலிருந்தே அனைத்து உயிர்களும் உருவாகியுள்ளன; அந்த வெளிச்சத்திலிருந்தே இந்த உலகங்களும் உருவாகியுள்ளன.
All living beings have come into being from that very light; these worlds too have come into being from that very light.
- வரி 3Line 3
ஏரொளிச் சக்கரத்தைத் தொடர்ந்து வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் சாதகர்களும் இந்த மூல விதையின் வெளிச்சத்திலிருந்தே உருவாகியிருக்கிறார்கள்.
The sadhakas who continue to bring forth the Erolich Chakra have themselves come into being from the light of this root seed.
- வரி 4Line 4
குறிப்பு: அனைத்தையும் உருவாக்கும் மூல விதையாக சாதகருக்குள்ளிருந்து வெளிப்படும் ஏரொளிச் சக்கரத்தின் வெளிச்சம் இருந்தாலும், இவை அனைத்திற்கும் மூலகாரணமாக இருப்பது அசையாத சக்தியான இறைவனே ஆவான்.
Note: even though the light of the Erolich Chakra emerging from within the sadhaka stands as the root seed that brings forth everything, it is God, the unmoving power, who is the root cause behind all of it.
திருமந்திரம் பாடல் #1279





