தொடர்ந்து படிக்கread this section continuously
விரிந்தது விந்துவும் கெட்டது வீசம்விரிந்தது விந்துவும் நாதத் தளவினில்விரிந்தது வுட்கட்ட மெட்டெட்டு மாகில்விரிந்தது விந்து விரையது வாமே.
உரைmeaning
பாடல் #1277 இல் உள்ளபடி, அண்ட சராசரங்கள் அனைத்திற்கும் விரிந்து பரவும் ஒளி அதிகமாகும்போது மந்திர ஒலிகள் அளவில் குறைந்து மறைந்துவிடும். பிறகு ஒளியும் ஓசையும் அளவில் சமமாக விரிந்து பரவும்போது, அவற்றின் உள் அமைப்பில் ஒன்றோடு ஒன்று அறுபத்து நான்கு மடங்கு அளவில் இருக்கும்படி ஆகிவிட்டால், அதுவே பாடல் #1276 இல் உள்ளபடி இறைவனை அடைய விரும்பிச் சாதகம் செய்யும் உயிர்கள் அனைவருக்கும் முக்திக்கு வழிகாட்டும் வித்தாக ஆகிவிடும்.
As in verse #1277, when the light spreading through the whole universe increases, the mantra sounds diminish and vanish. Afterward, when light and sound spread out equally in measure, and their inner structure comes to stand at sixty-four times one to the other, that itself becomes, as in verse #1276, the seed that guides all the souls performing sadhana who wish to reach God toward liberation.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
பாடல் #1277 இல் உள்ளபடி, அண்ட சராசரங்கள் அனைத்திற்கும் விரிந்து பரவும் ஒளி அதிகமாகும்போது மந்திர ஒலிகள் அளவில் குறைந்து மறைந்துவிடும்.
As in verse #1277, when the light spreading through the whole universe increases, the mantra sounds diminish and vanish.
- வரி 2Line 2
பிறகு ஒளியும் ஓசையும் அளவில் சமமாக விரிந்து பரவும்.
Afterward, light and sound spread out equally in measure.
- வரி 3Line 3
அவற்றின் உள் அமைப்பில் ஒன்றோடு ஒன்று அறுபத்து நான்கு மடங்கு அளவில் இருக்கும்படி ஆகிவிடும்.
Their inner structure comes to stand at sixty-four times one to the other.
- வரி 4Line 4
அதுவே பாடல் #1276 இல் உள்ளபடி இறைவனை அடைய விரும்பிச் சாதகம் செய்யும் உயிர்கள் அனைவருக்கும் முக்திக்கு வழிகாட்டும் வித்தாக ஆகிவிடும்.
That itself becomes, as in verse #1276, the seed that guides all the souls performing sadhana who wish to reach God toward liberation.
திருமந்திரம் பாடல் #1278





