திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1277

நான்காம் தந்திரம்9. ஏரொளிச் சக்கரம்

தொடர்ந்து படிக்கread this section continuously

வீச மிரண்டுள நாதத் தெழுவனவீசமு மொன்று விரைந்திடு மேலுறவீசமும் நாதமு மெழுந்துட னொத்தபின்வீசமும் விந்து விரிந்தது காணுமே.

உரை

பாடல் #1276 இல் உள்ளபடி, ஏரொளிச் சக்கரத்திலிருந்து வெளிப்படும் ஓசையிலிருந்து தோன்றும் மந்திர ஒலிகள் இரு வகைப்படும். இவை இரண்டும் ஓசையிலிருந்து வெளிப்பட்டு, மேல்நோக்கி ஒன்றன்மேல் ஒன்றாக விரைவாக எழுந்து கொண்டே இருக்கும். இந்த இரு வகை மந்திர ஒலிகளும் ஏரொளிச் சக்கரத்தின் ஓசையுடன் சமமாகச் சேர்ந்து ஒன்றாக வெளிப்பட்ட பின், ஏரொளிச் சக்கரத்திலிருந்து வெளிப்பட்டு அண்ட சராசரங்கள் முழுவதும் விரிந்து பரவும் ஒளியுடனும் சமமாக விரிந்து பரவுவதை, பாடல் #1276 இல் உள்ளபடி இறைவனை அடைய விரும்பிச் சாதகம் செய்யும் உயிர்கள் காணலாம்.

வரி வாரியாக

  • வரி 1

    பாடல் #1276 இல் உள்ளபடி, ஏரொளிச் சக்கரத்திலிருந்து வெளிப்படும் ஓசையிலிருந்து தோன்றும் மந்திர ஒலிகள் இரு வகைப்படும்.

  • வரி 2

    இவை இரண்டும் ஓசையிலிருந்து வெளிப்பட்டு, மேல்நோக்கி ஒன்றன்மேல் ஒன்றாக விரைவாக எழுந்து கொண்டே இருக்கும்.

  • வரி 3

    இந்த இரு வகை மந்திர ஒலிகளும் ஏரொளிச் சக்கரத்தின் ஓசையுடன் சமமாகச் சேர்ந்து ஒன்றாக வெளிப்படுகின்றன.

  • வரி 4

    அதன்பின், ஏரொளிச் சக்கரத்திலிருந்து வெளிப்பட்டு அண்ட சராசரங்கள் முழுவதும் விரிந்து பரவும் ஒளியுடனும் சமமாக விரிந்து பரவுவதை, பாடல் #1276 இல் உள்ளபடி இறைவனை அடைய விரும்பிச் சாதகம் செய்யும் உயிர்கள் காணலாம்.

திருமந்திரம் பாடல் #1277

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout