திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1276

நான்காம் தந்திரம்9. ஏரொளிச் சக்கரம்

தொடர்ந்து படிக்கread this section continuously

விந்துவு நாதமு மொக்க விழுந்திடில்விந்துவு நாதமு மொக்க விரையதாம்விந்திற் குறைந்திடு நாத மெழுந்திடில்விந்துவை யெண்மடி கொண்டது வீசமே.

உரை

பாடல் #1275 இல் உள்ளபடி, சாதகருக்குள்ளிருந்து வெளிப்பட்டு வந்து அண்ட சராசரங்கள் முழுவதும் பரவுகின்ற ஏரொளிச் சக்கரம், அங்கிருந்து ஒளியும் ஓசையும் சம அளவில் கீழுள்ள உலகங்களுக்கு வீழ்ந்து நன்மை அளிக்கும் மூல விதையாக இருக்கின்றது. உலகில் இறைவனை அடைய முயலும் ஆன்மாக்களுக்குப் பயன்படும்படி ஒளி குறைந்து, அதற்குப் பதிலாக ஓசை எட்டு மடங்கு அதிகமாக வெளிப்படும்போது, அதுவே மந்திர ஓசையாக இருக்கின்றது. சாதகருக்குள்ளிருந்து வெளிப்படும் இந்த ஏரொளிச் சக்கரம் அண்டங்கள் முழுவதும் விரிந்து பரவி, அங்கிருந்து அனைத்து உலகங்களுக்கும் நன்மை அளிக்கும் மூல விதையாக இருக்கின்றது. இறைவனை அடைய விரும்பிச் சாதகம் செய்யும் உயிர்கள் மேலும் மேன்மை அடையும்படி, இந்தச் சக்கரம் ஒளியைக் குறைத்து ஓசையை அதிகமாக்கி மந்திர ஓசையாகக் கொடுக்கின்றது.

வரி வாரியாக

  • வரி 1

    பாடல் #1275 இல் உள்ளபடி, ஏரொளிச் சக்கரம் அண்ட சராசரங்கள் முழுவதும் பரவி, அங்கிருந்து ஒளியும் ஓசையும் சம அளவில் கீழுள்ள உலகங்களுக்கு வீழ்ந்து நன்மை அளிக்கும் மூல விதையாக இருக்கின்றது.

  • வரி 2

    உலகில் இறைவனை அடைய முயலும் ஆன்மாக்களுக்குப் பயன்படும்படி ஒளி குறைந்து, அதற்குப் பதிலாக ஓசை எட்டு மடங்கு அதிகமாக வெளிப்படும்போது, அதுவே மந்திர ஓசையாக இருக்கின்றது.

  • வரி 3

    சாதகருக்குள்ளிருந்து வெளிப்படும் இந்த ஏரொளிச் சக்கரம் அண்டங்கள் முழுவதும் விரிந்து பரவி, அங்கிருந்து அனைத்து உலகங்களுக்கும் நன்மை அளிக்கும் மூல விதையாக இருக்கின்றது.

  • வரி 4

    இறைவனை அடைய விரும்பிச் சாதகம் செய்யும் உயிர்கள் மேலும் மேன்மை அடையும்படி, இந்தச் சக்கரம் ஒளியைக் குறைத்து ஓசையை அதிகமாக்கி மந்திர ஓசையாகக் கொடுக்கின்றது.

திருமந்திரம் பாடல் #1276

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout