தொடர்ந்து படிக்கread this section continuously
நின்றது வண்டமு நீளும் புவியெலாம்நின்றவிவ் வண்ட நிலைபெறக் கண்டிடநின்றவிவ் வண்டமு மூல மலமொக்கும்நின்றவிவ் வண்டம் பலமது விந்துவே.
உரைmeaning
பாடல் #1274 இல் உள்ளபடி அண்ட சராசரங்கள் முழுவதும் விரிந்து பரவி உலகத்திலுள்ள ஐந்து பூதங்களோடும் ஒளியாக நிற்கின்ற ஏரொளிச் சக்கரமானது அண்ட சராசரங்கள் முழுவதும் விரிந்து அதிலுள்ள அனைத்து உலகங்களுக்கும் பரவி நிற்கின்றது. இந்த ஏரொளிச் சக்கரம் அண்ட சராசரங்கள் முழுவதும் பரவி நின்று அனைத்தையும் தாங்கி நிற்பது எப்படி என்பதை ஆராய்ந்து பார்த்தால், அது சாதகருக்குள்ளிருக்கும் மூலாதாரத்திலிருந்து வெளிப்படும் ஏரொளிச் சக்கரத்தின் வெளிச்சத்தை சார்ந்தே இருக்கின்றது. இப்படி அண்ட சராசரங்கள் முழுவதும் தாங்கி நிற்கின்ற சக்தியைக் கொடுப்பது சாதகருக்குள்ளிருந்து வெளிப்பட்டுக் கொண்டே இருக்கும் ஏரொளிச் சக்கரத்தின் வெளிச்சமே ஆகும்.
As in verse #1274, the Chakra of Ascension, which spreads throughout the universe and stands as light together with the five elements of the world, spreads throughout the entire universe and extends to all the worlds within it. If one examines how this Chakra of Ascension, spreading throughout the whole universe, stands and sustains everything, it depends entirely on the light of the Chakra of Ascension that emerges from the Muladhara within the seeker. Thus, what gives the power that sustains the entire universe is precisely the light of the Chakra of Ascension that keeps emerging from within the seeker.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
பாடல் #1274 இல் உள்ளபடி அண்ட சராசரங்கள் முழுவதும் விரிந்து பரவி உலகத்திலுள்ள ஐந்து பூதங்களோடும் ஒளியாக நிற்கின்ற ஏரொளிச் சக்கரமானது அண்ட சராசரங்கள் முழுவதும் விரிந்து அதிலுள்ள அனைத்து உலகங்களுக்கும் பரவி நிற்கின்றது.
As in verse #1274, the Chakra of Ascension, which spreads throughout the universe and stands as light together with the five elements of the world, spreads throughout the entire universe and extends to all the worlds within it.
- வரி 2Line 2
இந்த ஏரொளிச் சக்கரம் அண்ட சராசரங்கள் முழுவதும் பரவி நின்று அனைத்தையும் தாங்கி நிற்பது எப்படி என்பதை ஆராய்ந்து பார்த்தால்,
If one examines how this Chakra of Ascension, spreading throughout the whole universe, stands and sustains everything,
- வரி 3Line 3
அது சாதகருக்குள்ளிருக்கும் மூலாதாரத்திலிருந்து வெளிப்படும் ஏரொளிச் சக்கரத்தின் வெளிச்சத்தை சார்ந்தே இருக்கின்றது.
it depends entirely on the light of the Chakra of Ascension that emerges from the Muladhara within the seeker.
- வரி 4Line 4
இப்படி அண்ட சராசரங்கள் முழுவதும் தாங்கி நிற்கின்ற சக்தியைக் கொடுப்பது சாதகருக்குள்ளிருந்து வெளிப்பட்டுக் கொண்டே இருக்கும் ஏரொளிச் சக்கரத்தின் வெளிச்சமே ஆகும்.
Thus, what gives the power that sustains the entire universe is precisely the light of the Chakra of Ascension that keeps emerging from within the seeker.
திருமந்திரம் பாடல் #1275





