திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1274

நான்காம் தந்திரம்9. ஏரொளிச் சக்கரம்

தொடர்ந்து படிக்கread this section continuously

காரொளி யண்டம் பொதிந்த துலகெங்கும்பாரொளி நீரொளி சாரொளி காலொளிவானொளி யொக்க வளர்ந்து கிடந்துபின்நேரொளி யொன்றாய் நிறைந்தங்கு நின்றதே.

உரை

பாடல் #1273 இல் உள்ளபடி அண்ட சராசரங்களில் இருக்கின்ற அடர்ந்த இருளுக்கும் வெளிச்சத்தைக் கொடுக்கும் பேரொளியாக இருக்கின்ற ஏரொளிச் சக்கரமானது அண்டத்தில் பொதிந்து இருந்து, உலகங்கள் அனைத்திலும் இருக்கின்ற நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய ஐந்து பூதங்களின் செயல்களுக்கு பயனளிக்கும் ஒளியாக வளர்ந்து கிடக்கிறது. அந்த ஏரொளிச் சக்கரத்தின் ஒளியானது உலகத்தில் இருக்கின்ற ஐந்து பூதங்களோடும் சரிசமாக ஒன்றாகச் சேர்ந்து முழுமைப் பெற்று, ஐந்து பூதங்களால் ஆகிய உலகத்தோடே நிற்கின்றது.

வரி வாரியாக

  • வரி 1

    பாடல் #1273 இல் உள்ளபடி அண்ட சராசரங்களில் இருக்கின்ற அடர்ந்த இருளுக்கும் வெளிச்சத்தைக் கொடுக்கும் பேரொளியாக இருக்கின்ற ஏரொளிச் சக்கரமானது அண்டத்தில் பொதிந்து இருந்து, உலகங்கள் அனைத்திலும் இருக்கின்ற,

  • வரி 2

    நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய ஐந்து பூதங்களின் செயல்களுக்கு பயனளிக்கும் ஒளியாக வளர்ந்து கிடக்கிறது.

  • வரி 3

    அந்த ஏரொளிச் சக்கரத்தின் ஒளியானது உலகத்தில் இருக்கின்ற ஐந்து பூதங்களோடும் சரிசமாக ஒன்றாகச் சேர்ந்து முழுமைப் பெற்று,

  • வரி 4

    ஐந்து பூதங்களால் ஆகிய உலகத்தோடே நிற்கின்றது.

திருமந்திரம் பாடல் #1274

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout