தொடர்ந்து படிக்கread this section continuously
கண்டிடு சக்கரம் விந்து வளர்வதாங்கண்டிடு நாதமுந் தன்மே லெழுந்திடக்கண்டிடு வன்னிக் கொழுந்தன லொத்தபின்கண்டிடு மப்புறங் காரொளி யானதே.
உரைmeaning
பாடல் #1272 இல் உள்ளபடி காணும்படி நட்சத்திரங்களாக மாறி இருக்கின்ற ஏரொளிச் சக்கரத்திலிருந்து வெளிப்படுகின்ற வெளிச்சமானது தொடர்ந்து வளர்ந்து கொண்டே இருக்கும்போது, அதன் மேலிருந்து வெளிப்படுகின்ற சத்தமும் அதனோடு தொடர்ந்து வளர்ந்து கொண்டே இருக்கும். அதனுடன் சாதகருக்குள்ளிருக்கும் அக்னியின் சுடரானது மிகவும் வளர்ந்து கொழுந்து விட்டுப் பெரும் நெருப்பாக நீண்டு ஒன்றாகச் சேர்ந்த பிறகு, அதுவே அண்ட சராசரங்களில் இருக்கின்ற அடர்ந்த இருளுக்கும் வெளிச்சத்தைக் கொடுக்கும் பேரொளியாக ஆகிவிடும்.
As in verse #1272, when the light that emerges from the Chakra of Ascension, which has visibly turned into stars, keeps continuously growing, the sound that emerges above it also keeps continuously growing along with it. Together with that, the flame of fire within the seeker grows greatly, blazes up, extends into a great fire, and joins together as one, and thereafter it itself becomes the great light that gives light even to the dense darkness within the universe.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
பாடல் #1272 இல் உள்ளபடி காணும்படி நட்சத்திரங்களாக மாறி இருக்கின்ற ஏரொளிச் சக்கரத்திலிருந்து வெளிப்படுகின்ற வெளிச்சமானது தொடர்ந்து வளர்ந்து கொண்டே இருக்கும்போது,
As in verse #1272, when the light that emerges from the Chakra of Ascension, which has visibly turned into stars, keeps continuously growing,
- வரி 2Line 2
அதன் மேலிருந்து வெளிப்படுகின்ற சத்தமும் அதனோடு தொடர்ந்து வளர்ந்து கொண்டே இருக்கும்.
the sound that emerges above it also keeps continuously growing along with it.
- வரி 3Line 3
அதனுடன் சாதகருக்குள்ளிருக்கும் அக்னியின் சுடரானது மிகவும் வளர்ந்து கொழுந்து விட்டுப் பெரும் நெருப்பாக நீண்டு ஒன்றாகச் சேர்ந்த பிறகு,
Together with that, the flame of fire within the seeker grows greatly, blazes up, extends into a great fire, and joins together as one,
- வரி 4Line 4
அதுவே அண்ட சராசரங்களில் இருக்கின்ற அடர்ந்த இருளுக்கும் வெளிச்சத்தைக் கொடுக்கும் பேரொளியாக ஆகிவிடும்.
and thereafter it itself becomes the great light that gives light even to the dense darkness within the universe.
திருமந்திரம் பாடல் #1273





