திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1272

நான்காம் தந்திரம்9. ஏரொளிச் சக்கரம்

தொடர்ந்து படிக்கread this section continuously

தாரகை யாகச் சமைந்தது சக்கரந்தாரகை மேலோர் தழைத்தது பேரொளிதாரகை சந்திர னற்பக லோன்வரத்தாரகை தாரகை தாரகை கண்டதே.

உரை

பாடல் #1271 இல் உள்ளபடி நட்சத்திரமாகவே மாறிவிட்ட ஏரொளிச் சக்கரமானது மேலும் மேலும் விரிவடைந்து மேல் நோக்கிச் சென்று கொண்டே இருக்கும்போது, ஒரு நிலையில் செழிப்பு பெற்று மிகப் பெரும் பேரொளியாக மாறுகின்றது. அதன்பிறகு பேரொளியாக இருக்கின்ற நட்சத்திரம் சந்திரனாகவும் நன்மையைத் தரும் சூரியனாகவும் மாறிக் கொண்டே வந்து, சூரியன் சந்திரன் கிரகங்கள் என்று உலகத்தவர்களால் அழைக்கப்படுகின்ற அனைத்து நட்சத்திரங்களாவும் மாறி இருப்பதைக் காணலாம்.

வரி வாரியாக

  • வரி 1

    பாடல் #1271 இல் உள்ளபடி நட்சத்திரமாகவே மாறிவிட்ட ஏரொளிச் சக்கரமானது மேலும் மேலும் விரிவடைந்து மேல் நோக்கிச் சென்று கொண்டே இருக்கும்போது,

  • வரி 2

    ஒரு நிலையில் செழிப்பு பெற்று மிகப் பெரும் பேரொளியாக மாறுகின்றது.

  • வரி 3

    அதன்பிறகு பேரொளியாக இருக்கின்ற நட்சத்திரம் சந்திரனாகவும் நன்மையைத் தரும் சூரியனாகவும் மாறிக் கொண்டே வந்து,

  • வரி 4

    சூரியன் சந்திரன் கிரகங்கள் என்று உலகத்தவர்களால் அழைக்கப்படுகின்ற அனைத்து நட்சத்திரங்களாவும் மாறி இருப்பதைக் காணலாம்.

திருமந்திரம் பாடல் #1272

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout