தொடர்ந்து படிக்கread this section continuously
நின்றிடும் விந்துவென் றுள்ள வெழுத்தெல்லாம்நின்றிடும் நாதமு மோங்கு மெழுத்துடன்நின்றிடு மப்பதி யவ்வெழுத் தேவரின்நின்றிடு மப்புறந் தாரகை யானதே.
உரைmeaning
பாடல் #1270 இல் உள்ளபடி காலமாகவே நிற்கின்ற ஏரொளிச் சக்கரத்தில் உள்ள பிரகாசமான வெளிச்சம் என்று அழைக்கப்படும் ஒளி வடிவம் பெற்ற எழுத்துக்கள் எல்லாமும், சத்தம் என்று அழைக்கப்படும் ஒலி வடிவத்தோடு ஒன்றாகச் சேர்ந்து, பரவெளியில் சென்று அடையும்போது, அங்கு வீற்றிருக்கும் இறை சக்தியால் சக்தியூட்டம் பெற்ற பிறகு, காலமாக நிற்கின்ற ஏரொளிச் சக்கரமே அண்டத்திலுள்ள அனைத்து நட்சத்திரங்களாகவும் மாறி விடுகின்றது.
As in verse #1270, all the letters that have taken the form of light, called brilliant radiance, within the Chakra of Ascension that stands as time itself, join together with the form of sound, called sound. When they go and reach the vast expanse, and are empowered there by the divine Shakti that dwells within it, the Chakra of Ascension, standing as time, itself turns into all the stars in the universe.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
பாடல் #1270 இல் உள்ளபடி காலமாகவே நிற்கின்ற ஏரொளிச் சக்கரத்தில் உள்ள பிரகாசமான வெளிச்சம் என்று அழைக்கப்படும் ஒளி வடிவம் பெற்ற எழுத்துக்கள் எல்லாமும்,
As in verse #1270, all the letters that have taken the form of light, called brilliant radiance, within the Chakra of Ascension that stands as time itself,
- வரி 2Line 2
சத்தம் என்று அழைக்கப்படும் ஒலி வடிவத்தோடு ஒன்றாகச் சேர்ந்து,
join together with the form of sound, called sound,
- வரி 3Line 3
பரவெளியில் சென்று அடையும்போது, அங்கு வீற்றிருக்கும் இறை சக்தியால் சக்தியூட்டம் பெற்ற பிறகு,
and, when they go and reach the vast expanse, and are empowered there by the divine Shakti that dwells within it,
- வரி 4Line 4
காலமாக நிற்கின்ற ஏரொளிச் சக்கரமே அண்டத்திலுள்ள அனைத்து நட்சத்திரங்களாகவும் மாறி விடுகின்றது.
the Chakra of Ascension, standing as time, itself turns into all the stars in the universe.
திருமந்திரம் பாடல் #1271





