தொடர்ந்து படிக்கread this section continuously
இராசியுட் சக்கர மெங்கும் நிறைந்தபின்இராசியுட் சக்கர மென்றறி விந்துவாம்இராசியுட் சக்கரம் நாதமு மொத்தபின்இராசியுட் சக்கரம் நின்றிடு மாறே.
உரைmeaning
பாடல் #1269 இல் உள்ளபடி சாதகருக்குள்ளிருந்து மேலெழுந்து வெளிப்படும் சக்கரமே காலங்கள் அனைத்துமாகவும் இருக்கின்றது. இப்படி காலமாகவே இருக்கின்ற ஏரொளிச் சக்கரம் அண்ட சராசரங்களில் இருக்கின்ற அனைத்து உலகங்களிலும் நிறைந்த பிறகு, சக்கரம் என்று அறியப்படுவது வெளிச்சமாகும். இந்த வெளிச்சத்தோடு சத்தமும் ஒன்றாகச் சேர்ந்த பிறகு, ஏரொளிச் சக்கரமாகவே காலங்கள் இருக்கின்ற வழியாக வெளிச்சமும் சத்தமும் இருக்கின்றது.
As in verse #1269, the chakra that rises up and emerges from within the seeker is itself all of time. When the Chakra of Ascension, which is thus time itself, fills all the worlds in the universe, what is known as the chakra becomes light. When this light joins together with sound as one, then light and sound exist by way of the Chakra of Ascension, which is itself time.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
பாடல் #1269 இல் உள்ளபடி சாதகருக்குள்ளிருந்து மேலெழுந்து வெளிப்படும் சக்கரமே காலங்கள் அனைத்துமாகவும் இருக்கின்றது.
As in verse #1269, the chakra that rises up and emerges from within the seeker is itself all of time.
- வரி 2Line 2
இப்படி காலமாகவே இருக்கின்ற ஏரொளிச் சக்கரம் அண்ட சராசரங்களில் இருக்கின்ற அனைத்து உலகங்களிலும் நிறைந்த பிறகு,
When the Chakra of Ascension, which is thus time itself, fills all the worlds in the universe,
- வரி 3Line 3
சக்கரம் என்று அறியப்படுவது வெளிச்சமாகும். இந்த வெளிச்சத்தோடு சத்தமும் ஒன்றாகச் சேர்ந்த பிறகு,
what is known as the chakra becomes light. When this light joins together with sound as one,
- வரி 4Line 4
ஏரொளிச் சக்கரமாகவே காலங்கள் இருக்கின்ற வழியாக வெளிச்சமும் சத்தமும் இருக்கின்றது.
then light and sound exist by way of the Chakra of Ascension, which is itself time.
திருமந்திரம் பாடல் #1270





