திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1269

நான்காம் தந்திரம்9. ஏரொளிச் சக்கரம்

தொடர்ந்து படிக்கread this section continuously

அவ்வின மூன்றுமவ் வாடது வாய்வரும்எவ்வின மூன்றுங் கிளர்தரு வேறதாஞ்சவ்வின மூன்றுந் தழைத்திடு தண்டதாம்இவ்வின மூன்று மிராசிக ளெல்லாம்.

உரை

பாடல் #1268 இல் உள்ளபடி உலகத்தவர்களால் சொல்லப்படுகின்ற காலத்தின் பல விதங்களாக இருக்கின்ற ஏரொளிச் சக்கரம் அடிப்படையில் இறந்த காலம் நிகழ் காலம் எதிர் காலம் எனும் மூன்று விதங்களாகவே இருக்கின்றது. இந்த மூன்று விதமான காலங்களும் ஏரொளிச் சக்கரம் மூலாதாரத்திலிருந்து சுழுமுனை நாடி வழியே பிரகாசத்தோடு மேலெழுந்து வரும்போது, அதன் உடனே அசைந்தாடிக் கொண்டே வருகின்றது. இப்படி மேலெழுந்து வந்து செழிப்பாக வெளிப்படும் மூன்று விதமான காலங்களே உலகத்தவர்களால் நாழிகை நாள் மாதம் வருடம் இராசி என்று குறிக்கப்படும் எல்லாமாகவும் இருக்கின்றது.

வரி வாரியாக

  • வரி 1

    பாடல் #1268 இல் உள்ளபடி உலகத்தவர்களால் சொல்லப்படுகின்ற காலத்தின் பல விதங்களாக இருக்கின்ற ஏரொளிச் சக்கரம் அடிப்படையில் இறந்த காலம் நிகழ் காலம் எதிர் காலம் எனும் மூன்று விதங்களாகவே இருக்கின்றது.

  • வரி 2

    இந்த மூன்று விதமான காலங்களும் ஏரொளிச் சக்கரம் மூலாதாரத்திலிருந்து சுழுமுனை நாடி வழியே பிரகாசத்தோடு மேலெழுந்து வரும்போது,

  • வரி 3

    அதன் உடனே அசைந்தாடிக் கொண்டே வருகின்றது.

  • வரி 4

    இப்படி மேலெழுந்து வந்து செழிப்பாக வெளிப்படும் மூன்று விதமான காலங்களே உலகத்தவர்களால் நாழிகை நாள் மாதம் வருடம் இராசி என்று குறிக்கப்படும் எல்லாமாகவும் இருக்கின்றது.

திருமந்திரம் பாடல் #1269

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout