திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1268

நான்காம் தந்திரம்9. ஏரொளிச் சக்கரம்

தொடர்ந்து படிக்கread this section continuously

வந்திடு மாகாச மாறது நாழிகைவந்திடு மக்கர முப்பதி ராசியும்வந்திடு நாளது முந்நூற் றறுபதும்வந்திடு மாண்டு வகுத்துரை யவ்வியே.

உரை

பாடல் #1267 இல் உள்ளபடி சாதகருக்குள்ளிருந்து வெளிப்பட்டு வந்திடும் ஏரொளிச் சக்கரமே, ஆகாயத்தில் இருக்கும் சூரிய சந்திர நட்சத்திர அமைப்புகளின் வழியாக வருகின்ற பகலில் இருக்கின்ற நாழிகைகளும் இரவில் இருக்கின்ற நாழிகைகளும் சேர்ந்து ஒரு நாளாக இருக்கின்றது. அந்த நாள்கள் பல சேர்ந்து இராசி என்று சொல்லப்படுகின்ற மாதங்களாக இருக்கின்றது. அந்த மாதங்கள் சேர்ந்து ஒரு தமிழ் வருடமாக இருக்கின்றது. இப்படி உலகத்தவர்களால் சொல்லப்படுகின்ற காலத்தின் விதங்களாகவே ஏரொளிச் சக்கரம் இருக்கின்றது.

வரி வாரியாக

  • வரி 1

    பாடல் #1267 இல் உள்ளபடி சாதகருக்குள்ளிருந்து வெளிப்பட்டு வந்திடும் ஏரொளிச் சக்கரமே, ஆகாயத்தில் இருக்கும் சூரிய சந்திர நட்சத்திர அமைப்புகளின் வழியாக வருகின்ற பகலில் இருக்கின்ற நாழிகைகளும் இரவில் இருக்கின்ற நாழிகைகளும் சேர்ந்து ஒரு நாளாக இருக்கின்றது.

  • வரி 2

    அந்த நாள்கள் பல சேர்ந்து இராசி என்று சொல்லப்படுகின்ற மாதங்களாக இருக்கின்றது.

  • வரி 3

    அந்த மாதங்கள் சேர்ந்து ஒரு தமிழ் வருடமாக இருக்கின்றது.

  • வரி 4

    இப்படி உலகத்தவர்களால் சொல்லப்படுகின்ற காலத்தின் விதங்களாகவே ஏரொளிச் சக்கரம் இருக்கின்றது.

திருமந்திரம் பாடல் #1268

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout