திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1267

நான்காம் தந்திரம்9. ஏரொளிச் சக்கரம்

தொடர்ந்து படிக்கread this section continuously

ஆவின மானவை முந்நூற் றறுபதும்ஆவின மப்பதி னைந்தின மாயுறும்ஆவின மப்பதி னெட்டுட னாயுறும்ஆவின மக்கதி ரோன்வர வந்தே.

உரை

பாடல் #1266 இல் உள்ளபடி முக்காலத்தையும் தமக்குள்ளேயே அறிகின்ற நிலையை அடைந்த சாதகர்கள் அனைவரின் இனமாகவே இருப்பவை, சூரியனை முதலாகக் கொண்டு வருகின்ற முந்நூற்று அறுபது நாட்கள் கொண்ட தமிழ் வருடங்களாகவும், அதற்குள் சந்திரனை முதலாகக் கொண்டு வருகின்ற வளர்பிறை மற்றும் தேய்பிறை ஆகிய பதினைந்து நாட்களாகவும், அதற்குள் இருக்கின்ற பன்னிரண்டு மாதங்களாகவும் ஆறு விதமான பருவங்களாகவும் சாதகருக்குள்ளிருந்து வெளிப்படுகின்ற ஏரொளிச் சக்கரமே ஒன்றோடு ஒன்று இணைந்து வெளிப்படுகின்றது.

வரி வாரியாக

  • வரி 1

    பாடல் #1266 இல் உள்ளபடி முக்காலத்தையும் தமக்குள்ளேயே அறிகின்ற நிலையை அடைந்த சாதகர்கள் அனைவரின் இனமாகவே இருப்பவை, சூரியனை முதலாகக் கொண்டு வருகின்ற முந்நூற்று அறுபது நாட்கள் கொண்ட தமிழ் வருடங்களாகவும்,

  • வரி 2

    அதற்குள் சந்திரனை முதலாகக் கொண்டு வருகின்ற வளர்பிறை மற்றும் தேய்பிறை ஆகிய பதினைந்து நாட்களாகவும்,

  • வரி 3

    அதற்குள் இருக்கின்ற பன்னிரண்டு மாதங்களாகவும் ஆறு விதமான பருவங்களாகவும்,

  • வரி 4

    சாதகருக்குள்ளிருந்து வெளிப்படுகின்ற ஏரொளிச் சக்கரமே ஒன்றோடு ஒன்று இணைந்து வெளிப்படுகின்றது.

திருமந்திரம் பாடல் #1267

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout