திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1266

நான்காம் தந்திரம்9. ஏரொளிச் சக்கரம்

தொடர்ந்து படிக்கread this section continuously

அந்தமு மீறு முதலா னவையறஅந்தமு மப்பதி னெட்டுட னாதலால்அந்தமு மப்பதின் மூன்றி லமர்ந்தபின்அந்தமு மிந்துகை யாருட மானதே.

உரை

பாடல் #1265 இல் உள்ளபடி சாதகருக்குள் முதலாகவும், அண்ட சராசரங்களில் இருக்கும் அனைத்து உலகங்களுக்கும் சென்று சேருகின்ற முடிவாகவும் இருக்கின்ற ஏரொளிச் சக்கரத்தில், சாதகரின் தலை உச்சியிலுள்ள எல்லையிலிருந்து அண்ட சராசரங்களின் முடிவாக இருக்கின்ற இடம் வரை மீதி இருக்கின்ற இடத்தில், மூலாதாரத்திலிருந்து குண்டலினி சக்தியானது எழுந்து விசுத்தி சக்கரம் வழியாக ஆஞ்சை சக்கரம் வரை ஏறிக் கடந்து சென்று, அதிலிருந்து துவாதசாந்த வெளி வரை ஏறிச் சென்று, பாடல் #1113 இல் உள்ளபடி அங்கிருக்கும் துவாதசாந்த வெளியைக் கடந்து சந்திர மண்டலத்தில் வீற்றிருந்தால், முக்காலத்தையும் தமக்குள்ளே அறிகின்ற நிலையை சாதகர் அடைந்து விடுவார்.

வரி வாரியாக

  • வரி 1

    பாடல் #1265 இல் உள்ளபடி சாதகருக்குள் முதலாகவும், அண்ட சராசரங்களில் இருக்கும் அனைத்து உலகங்களுக்கும் சென்று சேருகின்ற முடிவாகவும் இருக்கின்ற ஏரொளிச் சக்கரத்தில், சாதகரின் தலை உச்சியிலுள்ள எல்லையிலிருந்து அண்ட சராசரங்களின் முடிவாக இருக்கின்ற இடம் வரை மீதி இருக்கின்ற இடத்தில்,

  • வரி 2

    மூலாதாரத்திலிருந்து குண்டலினி சக்தியானது எழுந்து விசுத்தி சக்கரம் வழியாக ஆஞ்சை சக்கரம் வரை ஏறிக் கடந்து சென்று,

  • வரி 3

    அதிலிருந்து துவாதசாந்த வெளி வரை ஏறிச் சென்று,

  • வரி 4

    பாடல் #1113 இல் உள்ளபடி அங்கிருக்கும் துவாதசாந்த வெளியைக் கடந்து சந்திர மண்டலத்தில் வீற்றிருந்தால், முக்காலத்தையும் தமக்குள்ளே அறிகின்ற நிலையை சாதகர் அடைந்து விடுவார்.

திருமந்திரம் பாடல் #1266

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout