தொடர்ந்து படிக்கread this section continuously
எழுத்தவை நூறொடு நாற்பத்து நாலும்எழுத்தவை யாறது வந்நடு வன்னிஎழுத்தவை யந்நடு வச்சுட ராகிஎழுத்தவை தான்முத லந்தமு மாமே.
உரைmeaning
பாடல் #1264 இல் உள்ளபடி ஏரொளிச் சக்கரத்திலிருந்து வெளிப்படுகின்ற நூற்றி நாற்பத்து நான்கு எழுத்துக்களும் சாதகருக்குள் இருக்கின்ற ஆறு ஆதார சக்கரங்களில் அடங்கி இருக்கின்ற ஆறு எழுத்துக்களாக இருக்கின்றன. அந்த ஆறு எழுத்துக்களுக்கும் நடுவில் அக்னியாகவும், அதற்கு நடுவில் இருக்கின்ற சுடராகவும் இருக்கின்றன. இவை அனைத்தும் சாதகருக்குள் முதலாகவும், பாடல் #1259 இல் உள்ளபடி அவரைத் தாண்டிய அண்ட சராசரங்களில் இருக்கின்ற அனைத்து உலகங்களுக்கும் விரிந்து இருக்கும் ஏரொளிச் சக்கரத்தின் அந்தமாகவும் இருக்கின்றன.
As in verse #1264, the one hundred and forty-four letters that emerge from the Chakra of Ascension exist as the six letters contained within the six adhara chakras in the seeker. Amid those six letters is fire, and amid that fire is the flame. All these exist, within the seeker, as the beginning, and, as in verse #1259, as the end of the Chakra of Ascension that spreads beyond the seeker to all the worlds in the universe.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
பாடல் #1264 இல் உள்ளபடி ஏரொளிச் சக்கரத்திலிருந்து வெளிப்படுகின்ற நூற்றி நாற்பத்து நான்கு எழுத்துக்களும் சாதகருக்குள் இருக்கின்ற ஆறு ஆதார சக்கரங்களில் அடங்கி இருக்கின்ற ஆறு எழுத்துக்களாக இருக்கின்றன.
As in verse #1264, the one hundred and forty-four letters that emerge from the Chakra of Ascension exist as the six letters contained within the six adhara chakras in the seeker.
- வரி 2Line 2
அந்த ஆறு எழுத்துக்களுக்கும் நடுவில் அக்னியாகவும்,
Amid those six letters is fire,
- வரி 3Line 3
அதற்கு நடுவில் இருக்கின்ற சுடராகவும் இருக்கின்றன.
and amid that fire is the flame.
- வரி 4Line 4
இவை அனைத்தும் சாதகருக்குள் முதலாகவும், பாடல் #1259 இல் உள்ளபடி அவரைத் தாண்டிய அண்ட சராசரங்களில் இருக்கின்ற அனைத்து உலகங்களுக்கும் விரிந்து இருக்கும் ஏரொளிச் சக்கரத்தின் அந்தமாகவும் இருக்கின்றன.
All these exist, within the seeker, as the beginning, and, as in verse #1259, as the end of the Chakra of Ascension that spreads beyond the seeker to all the worlds in the universe.
திருமந்திரம் பாடல் #1265





