தொடர்ந்து படிக்கread this section continuously
அம்முத லாறுமவ் வாதி யெழுத்தாகும்அம்முத லாறுமவ் வம்மை யெழுத்தாகும்இம்முதல் நாலு மிருந்திடு வன்னியேஇம்முத லாகு மெழுத்தவை யெல்லாம்.
உரைmeaning
பாடல் #1265 இல் உள்ளபடி சிவசூரியனின் நிலையை அடையக் காரணமான ஒரு எழுத்தே ஆதியான பரம்பொருளைக் குறிக்கின்ற எழுத்தாகும். சாதகருக்குள் இருக்கின்ற ஆறு ஆதார சக்கரங்களிலும் இருக்கின்ற எழுத்துக்களுக்கு இந்த ஒரு எழுத்தே முதன்மையானதாக இருக்கின்றது. சாதகருக்குள் இருக்கும் ஆறு ஆதார சக்கரங்களிலும் இருக்கின்ற எழுத்துக்கள் இறைவியின் சக்தி மயத்தைக் குறிக்கின்ற எழுத்துக்களாகும். இந்த ஆறு ஆதாரச் சக்கரங்களில் முதலில் இருக்கின்ற நான்கு சக்கரங்களுக்கு நடுவில் இருக்கின்ற தொப்புள் கொடியில் அக்னி வீற்றிருக்கின்றது. இந்த அக்னியிலிருந்தே ஏரொளிச் சக்கரத்தில் இருக்கும் நூற்று நாற்பத்து நான்கு எழுத்துக்கள் எல்லாம் வெளிப்படுகின்றன.
As told in verse #1265, the single letter that is the reason for attaining the state of Sivasuryan is the letter denoting the primal Supreme Being. Of all the letters within the six adhara chakras in the seeker, this one letter is foremost. The letters within the six adhara chakras in the seeker are the letters denoting the Goddess's own Shakti-nature. Among these six adhara chakras, at the navel-cord between the middle of the first four, fire dwells. From this very fire, all one hundred and forty-four letters within the Chakra of Ascension emerge.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
பாடல் #1265 இல் உள்ளபடி சிவசூரியனின் நிலையை அடையக் காரணமான ஒரு எழுத்தே ஆதியான பரம்பொருளைக் குறிக்கின்ற எழுத்தாகும்.
As told in verse #1265, the single letter that is the reason for attaining the state of Sivasuryan is the letter denoting the primal Supreme Being.
- வரி 2Line 2
சாதகருக்குள் இருக்கின்ற ஆறு ஆதார சக்கரங்களிலும் இருக்கின்ற எழுத்துக்களுக்கு இந்த ஒரு எழுத்தே முதன்மையானதாக இருக்கின்றது. சாதகருக்குள் இருக்கும் ஆறு ஆதார சக்கரங்களிலும் இருக்கின்ற எழுத்துக்கள் இறைவியின் சக்தி மயத்தைக் குறிக்கின்ற எழுத்துக்களாகும்.
Of all the letters within the six adhara chakras in the seeker, this one letter is foremost. The letters within the six adhara chakras in the seeker are the letters denoting the Goddess's own Shakti-nature.
- வரி 3Line 3
இந்த ஆறு ஆதாரச் சக்கரங்களில் முதலில் இருக்கின்ற நான்கு சக்கரங்களுக்கு நடுவில் இருக்கின்ற தொப்புள் கொடியில் அக்னி வீற்றிருக்கின்றது.
Among these six adhara chakras, at the navel-cord between the middle of the first four, fire dwells.
- வரி 4Line 4
இந்த அக்னியிலிருந்தே ஏரொளிச் சக்கரத்தில் இருக்கும் நூற்று நாற்பத்து நான்கு எழுத்துக்கள் எல்லாம் வெளிப்படுகின்றன.
From this very fire, all one hundred and forty-four letters within the Chakra of Ascension emerge.
திருமந்திரம் பாடல் #1264





