திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1262

நான்காம் தந்திரம்9. ஏரொளிச் சக்கரம்

தொடர்ந்து படிக்கread this section continuously

ஆகாச வக்கர மாவது சொல்லிடில்ஆகாச வக்கரத் துள்ளே யெழுத்தவைஆகாச வவ்வெழுத் தாகிச் சிவானந்தம்ஆகாச வக்கர மாவ தறிமினே.

உரை

பாடல் #1261 இல் உள்ளபடி ஆகாசத்தின் தன்மையாக மாறிய எழுத்தின் வடிவமாக ஏரொளிச் சக்கரம் மாறுவது எப்படி என்று சொல்லப் போனால், பாடல் #1257 இல் உள்ளபடி ஏரொளிச் சக்கரத்தின் உள்ளே இருக்கின்ற நூற்று நாற்பத்து நான்கு எழுத்துக்களும் ஆகாசத் தன்மையில் இருக்கின்ற ஒரு எழுத்துக்குள்ளேயே அடங்கி இருக்கின்றது. ஆகாசத் தன்மையில் இருக்கும் அந்த எழுத்து வடிவமே பிறகு ஓர் எழுத்தாகி, கிடைப்பதற்கு அரிய மிகப்பெரும் சிவானந்தத்தைக் கொடுக்கின்றது. ஆகாசத் தன்மையில் இருக்கும் அந்த எழுத்து வடிவமே ஓர் எழுத்தாக எப்படி மாறி சிவானந்தத்தைக் கொடுக்கின்றது என்று அறிந்து உணர்ந்து கொள்ள வேண்டும் என இப்பாடல் கூறுகிறது.

வரி வாரியாக

  • வரி 1

    பாடல் #1261 இல் உள்ளபடி ஆகாசத்தின் தன்மையாக மாறிய எழுத்தின் வடிவமாக ஏரொளிச் சக்கரம் மாறுவது எப்படி என்று சொல்லப் போனால்,

  • வரி 2

    பாடல் #1257 இல் உள்ளபடி ஏரொளிச் சக்கரத்தின் உள்ளே இருக்கின்ற நூற்று நாற்பத்து நான்கு எழுத்துக்களும் ஆகாசத் தன்மையில் இருக்கின்ற ஒரு எழுத்துக்குள்ளேயே அடங்கி இருக்கின்றது.

  • வரி 3

    ஆகாசத் தன்மையில் இருக்கும் அந்த எழுத்து வடிவமே பிறகு ஓர் எழுத்தாகி, கிடைப்பதற்கு அரிய மிகப்பெரும் சிவானந்தத்தைக் கொடுக்கின்றது.

  • வரி 4

    ஆகாசத் தன்மையில் இருக்கும் அந்த எழுத்து வடிவமே ஓர் எழுத்தாக எப்படி மாறி சிவானந்தத்தைக் கொடுக்கின்றது என்று அறிந்து உணர்ந்து கொள்ள வேண்டும் என இப்பாடல் கூறுகிறது.

திருமந்திரம் பாடல் #1262

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout