திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1260

நான்காம் தந்திரம்9. ஏரொளிச் சக்கரம்

தொடர்ந்து படிக்கread this section continuously

விரிந்த வெழுத்தது விந்துவும் நாதமும்விரிந்த வெழுத்தது சக்கர மாகவிரிந்த வெழுத்தது மேல்வரும் பூமிவிரிந்த வெழுத்தினி லப்புற மப்பே.

உரை

பாடல் #1259 இல் உள்ளபடி உலகங்கள் அனைத்திற்கும் விரிந்து பரவிய எழுத்தானது வெளிச்சமாகவும் சத்தமாகவும் இருக்கின்றது. சாதகருக்குள்ளிருந்து மேலெழுந்து வந்து உலகங்கள் முழுவதும் விரிந்து பரவிய அந்த எழுத்தே ஏரொளிச் சக்கரமாகவும், பிறகு பஞ்ச பூதங்களில் முதலில் நிலத்தின் தன்மையையும், அதன் பிறகு அதிலிருந்து நீரின் தன்மையையும் வெளிப்படுத்துகின்றது.

வரி வாரியாக

  • வரி 1

    பாடல் #1259 இல் உள்ளபடி உலகங்கள் அனைத்திற்கும் விரிந்து பரவிய எழுத்தானது வெளிச்சமாகவும் சத்தமாகவும் இருக்கின்றது.

  • வரி 2

    சாதகருக்குள்ளிருந்து மேலெழுந்து வந்து உலகங்கள் முழுவதும் விரிந்து பரவிய அந்த எழுத்தே ஏரொளிச் சக்கரமாகவும்,

  • வரி 3

    பிறகு பஞ்ச பூதங்களில் முதலில் நிலத்தின் தன்மையையும்,

  • வரி 4

    அதன் பிறகு அதிலிருந்து நீரின் தன்மையையும் வெளிப்படுத்துகின்றது.

திருமந்திரம் பாடல் #1260

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout