தொடர்ந்து படிக்கread this section continuously
ஞாலம தாக விரிந்தது சக்கரம்ஞாலம தாயிடும் விந்துவும் நாதமும்ஞாலம தாயிடு மப்பதி யோசனைஞாலம தாக விரிந்தது எழுத்தே.
உரைmeaning
பாடல் #1258 இல் உள்ளபடி சாதகருக்குள்ளிருந்து மேலெழுந்து வந்து உலகமாகவே விளங்குகின்ற ஏரொளிச் சக்கரமானது அண்ட சராசரங்களில் இருக்கும் அனைத்து உலகங்களாகவும் ஆகி விடுகின்றது. அந்த சக்கரத்தோடு வெளிச்சமும் சத்தமும் இறை சக்தியும் எழுத்து வடிவமும் ஒன்றாகச் சேரும்போது, அதிலிருந்து வெளிப்படும் எழுத்தானது பல விதமான உலகங்களாக விரிந்து, சிந்திக்க முடியாத அளவு பல யோசனை தூரத்திற்குப் பரவுகின்றது.
As in verse #1258, the Chakra of Ascension, which rises up from within the seeker and shines forth as the world, itself becomes all the worlds within the universe. When that chakra, together with light, sound, the divine Shakti and the letter-form, all come together as one, the letter that emerges from it spreads out as many kinds of worlds, and extends to a distance of many yojanas beyond thought.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
பாடல் #1258 இல் உள்ளபடி சாதகருக்குள்ளிருந்து மேலெழுந்து வந்து உலகமாகவே விளங்குகின்ற ஏரொளிச் சக்கரமானது அண்ட சராசரங்களில் இருக்கும் அனைத்து உலகங்களாகவும் ஆகி விடுகின்றது.
As in verse #1258, the Chakra of Ascension, which rises up from within the seeker and shines forth as the world, itself becomes all the worlds within the universe.
- வரி 2Line 2
அந்த சக்கரத்தோடு வெளிச்சமும் சத்தமும் இறை சக்தியும் எழுத்து வடிவமும் ஒன்றாகச் சேரும்போது,
When that chakra, together with light, sound, the divine Shakti and the letter-form, all come together as one,
- வரி 3Line 3
அதிலிருந்து வெளிப்படும் எழுத்தானது பல விதமான உலகங்களாக விரிந்து,
the letter that emerges from it spreads out as many kinds of worlds,
- வரி 4Line 4
சிந்திக்க முடியாத அளவு பல யோசனை தூரத்திற்குப் பரவுகின்றது.
and extends to a distance of many yojanas beyond thought.
திருமந்திரம் பாடல் #1259





