திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1258

நான்காம் தந்திரம்9. ஏரொளிச் சக்கரம்

தொடர்ந்து படிக்கread this section continuously

மேல்வரும் விந்துவு மவ்வெழுத் தாய்விடும்மேல்வரும் நாதமு மோங்கு மெழுத்துடன்மேல்வரும் அப்பதி யவ்வெழுத் தேவரின்மேல்வரும் சக்கர மாய்வரும் ஞாலமே.

உரை

பாடல் #1257 இல் உள்ளபடி சாதகருக்குள் இருக்கும் மூலாதாரத்திலிருந்து ஏரொளிச் சக்கரம் மேல் நோக்கி ஏறி வரும்போது, அதனுள் அடங்கியிருக்கும் எழுத்தின் வடிவமாக வெளிச்சமும் பீஜமாக சத்தமும் வெளிப்படும். அந்த எழுத்துடன் சாதகருக்குள் இருக்கும் இறைவனும் சேர்ந்து வந்தால், வெளிப்படும் ஏரொளிச் சக்கரமானது உலகமாகவே விளங்கும்.

வரி வாரியாக

  • வரி 1

    பாடல் #1257 இல் உள்ளபடி சாதகருக்குள் இருக்கும் மூலாதாரத்திலிருந்து ஏரொளிச் சக்கரம் மேல் நோக்கி ஏறி வரும்போது,

  • வரி 2

    அதனுள் அடங்கியிருக்கும் எழுத்தின் வடிவமாக வெளிச்சமும் பீஜமாக சத்தமும் வெளிப்படும்.

  • வரி 3

    அந்த எழுத்துடன் சாதகருக்குள் இருக்கும் இறைவனும் சேர்ந்து வந்தால்,

  • வரி 4

    வெளிப்படும் ஏரொளிச் சக்கரமானது உலகமாகவே விளங்கும்.

திருமந்திரம் பாடல் #1258

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout