தொடர்ந்து படிக்கread this section continuously
சொல்லிய விந்துவு மீராறு நாதமாஞ்சொல்லிடு மப்பதி யவ்வெழுத் தாவனசொல்லிடு நூறொடு நாற்பத்து நாலுருச்சொல்லிடு சக்கர மாய்வரு மேலதே.
உரைmeaning
பாடல் #1256 இல் உள்ளபடி உள்ளுக்குள் இருந்து சொல்லப்பட்ட வழிமுறைகளின்படி மேலே ஏறி வந்த வெளிச்சத்திலிருந்து வெளிப்படும் சத்தங்கள் பன்னிரண்டு வகையான ஒலிகளாக இருக்கின்றது. இந்தப் பன்னிரண்டு வகையான ஒலிகளும் சாதகருக்குள் வீற்றிருக்கும் தலைவனாகிய இறைவனின் அம்சமாகவே இருக்கின்றன. இந்தப் பன்னிரண்டு வகையான ஒலிகளும் பலவிதமாகப் பரிணமித்து மொத்தம் நூற்றி நாற்பத்து நான்கு எழுத்துக்களின் வரிவடிவங்களாக வெளிப்படும். இந்த நூற்றி நாற்பத்து நான்கு எழுத்துக்களின் வரிவடிவங்களும் ஒன்று சேர்ந்து வெளிப்படும்போது, மூலாதாரத்திலிருந்து ஏரொளிச் சக்கரம் மேல் நோக்கி ஏறி வரும்.
As in verse #1256, following the methods spoken from within, the sounds that emerge from the light that has risen upward are twelve kinds of sound. These twelve kinds of sound are themselves the very portion of the Lord, the chief who dwells within the seeker. These twelve kinds of sound evolve in many forms and emerge as a total of one hundred and forty-four letter-forms. When these one hundred and forty-four letter-forms come together and emerge as one, the Chakra of Ascension rises upward from the Muladhara.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
பாடல் #1256 இல் உள்ளபடி உள்ளுக்குள் இருந்து சொல்லப்பட்ட வழிமுறைகளின்படி மேலே ஏறி வந்த வெளிச்சத்திலிருந்து வெளிப்படும் சத்தங்கள் பன்னிரண்டு வகையான ஒலிகளாக இருக்கின்றது.
As in verse #1256, following the methods spoken from within, the sounds that emerge from the light that has risen upward are twelve kinds of sound.
- வரி 2Line 2
இந்தப் பன்னிரண்டு வகையான ஒலிகளும் சாதகருக்குள் வீற்றிருக்கும் தலைவனாகிய இறைவனின் அம்சமாகவே இருக்கின்றன.
These twelve kinds of sound are themselves the very portion of the Lord, the chief who dwells within the seeker.
- வரி 3Line 3
இந்தப் பன்னிரண்டு வகையான ஒலிகளும் பலவிதமாகப் பரிணமித்து மொத்தம் நூற்றி நாற்பத்து நான்கு எழுத்துக்களின் வரிவடிவங்களாக வெளிப்படும்.
These twelve kinds of sound evolve in many forms and emerge as a total of one hundred and forty-four letter-forms.
- வரி 4Line 4
இந்த நூற்றி நாற்பத்து நான்கு எழுத்துக்களின் வரிவடிவங்களும் ஒன்று சேர்ந்து வெளிப்படும்போது, மூலாதாரத்திலிருந்து ஏரொளிச் சக்கரம் மேல் நோக்கி ஏறி வரும்.
When these one hundred and forty-four letter-forms come together and emerge as one, the Chakra of Ascension rises upward from the Muladhara.
திருமந்திரம் பாடல் #1257





