திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1255

நான்காம் தந்திரம்9. ஏரொளிச் சக்கரம்

தொடர்ந்து படிக்கread this section continuously

ஏரொளி யுள்ளெழு தாமரை நாலிதழ்ஏரொளி விந்துவி னாலெழு நாதமாம்ஏரொளி யக்கலை யெங்கும் நிறைந்தபின்ஏரொளிச் சக்கர மந்நடு வன்னியே.

உரை

உயிர்களுக்குள் இருக்கும் மூலாதாரமானது நான்கு இதழ்கள் கொண்ட தாமரை மலர் வடிவத்தில் சக்திமயமான சக்கரமாக இருக்கின்றது. அதைத் தியானம் தவம் ஆகிய சாதகங்களின் மூலம் மாற்றி அமைக்கும்போது, அதிலிருக்கும் குண்டலினி சக்தியானது எழுச்சி பெற்று சுழுமுனை நாடி வழியே மேலெழுந்து வரும்போது பிரகாசமான வெளிச்சமாக வருகின்றது. அந்த வெளிச்சத்திலிருந்து சத்தம் வெளிவருகின்றது. இந்த வெளிச்சமும் சத்தமும் சுழுமுனை நாடியின் அடியிலிருந்து உச்சித் துளை வரை முழுவதும் நிறைந்து நிற்கும்போது, அதன் நடுவில் அக்னியாக இருக்கும் சுடரே ஏரொளிச் சக்கரமாகும்.

வரி வாரியாக

  • வரி 1

    உயிர்களுக்குள் இருக்கும் மூலாதாரமானது நான்கு இதழ்கள் கொண்ட தாமரை மலர் வடிவத்தில் சக்திமயமான சக்கரமாக இருக்கின்றது.

  • வரி 2

    அதைத் தியானம் தவம் ஆகிய சாதகங்களின் மூலம் மாற்றி அமைக்கும்போது, அதிலிருக்கும் குண்டலினி சக்தியானது எழுச்சி பெற்று சுழுமுனை நாடி வழியே மேலெழுந்து வரும்போது பிரகாசமான வெளிச்சமாக வருகின்றது. அந்த வெளிச்சத்திலிருந்து சத்தம் வெளிவருகின்றது.

  • வரி 3

    இந்த வெளிச்சமும் சத்தமும் சுழுமுனை நாடியின் அடியிலிருந்து உச்சித் துளை வரை முழுவதும் நிறைந்து நிற்கும்போது,

  • வரி 4

    அதன் நடுவில் அக்னியாக இருக்கும் சுடரே ஏரொளிச் சக்கரமாகும்.

திருமந்திரம் பாடல் #1255

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout