திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1254

நான்காம் தந்திரம்8. ஆதார ஆதேயம்

தொடர்ந்து படிக்கread this section continuously

அம்மையு மத்தனு மன்புற்ற தல்லதுஅம்மையு மத்தனு மாரறிவா ரென்னைஅம்மையொ டத்தனும் யானு முடனிருந்தம்மையொடு அத்தனை யான்புரிந் தேனே.

உரை

பாடல் #1253 இல் உள்ளபடி எமது உடலாகவே மாறி எமக்குள் அமர்ந்திருக்கும் இறைவியும், பாடல் #1252 இல் உள்ளபடி எம்மோடு ஏகாந்தத்தில் தனித்து இருக்கும் இறைவனும் எம்மீது பேரன்பு கொண்டதைத் தவிர, வேறு எவருமே எம்மை முழுவதுமாக அறிந்து கொண்டது இல்லை. எமக்குள் இருக்கும் இறைவியோடு இறைவனும் சேர்ந்து இருக்க, அவர்களோடு யானும் சேர்ந்து இருந்து இறைவியோடு இறைவனையும் முழுவதுமாக யான் புரிந்து கொண்டேன்.

வரி வாரியாக

  • வரி 1

    பாடல் #1253 இல் உள்ளபடி எமது உடலாகவே மாறி எமக்குள் அமர்ந்திருக்கும் இறைவியும், பாடல் #1252 இல் உள்ளபடி எம்மோடு ஏகாந்தத்தில் தனித்து இருக்கும் இறைவனும் எம்மீது பேரன்பு கொண்டதைத் தவிர,

  • வரி 2

    வேறு எவருமே எம்மை முழுவதுமாக அறிந்து கொண்டது இல்லை.

  • வரி 3

    எமக்குள் இருக்கும் இறைவியோடு இறைவனும் சேர்ந்து இருக்க, அவர்களோடு யானும் சேர்ந்து இருந்து,

  • வரி 4

    இறைவியோடு இறைவனையும் முழுவதுமாக யான் புரிந்து கொண்டேன்.

திருமந்திரம் பாடல் #1254

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout