தொடர்ந்து படிக்கread this section continuously
அம்மனை யம்மை யரிவை மனோன்மணிசெம்மனை செய்து திருமங்கை யாய்நிற்கும்இம்மனை செய்த விருநில மங்கையும்அம்மனை யாகி யமர்ந்துநின் றாளே.
உரைmeaning
பாடல் #1252 இல் உள்ளபடி எமது வேண்டுதலை ஏற்றுக் கொண்டு இறைவனோடு சேர்ந்து இருக்கும் ஏகாந்தத்தை அருளியவளும், இறைவனுக்குத் துணைவியாக இருக்கின்றவளும், எமக்கும் அனைத்து உயிர்களுக்கும் தாயாக இருக்கின்றவளும், என்றும் இளமையுடன் இருக்கின்றவளும், இறைவனுடன் சரிசமமாக சேர்ந்து இருக்கின்ற மனோன்மணியானவளும் ஆகிய இறைவியை, எமது உடலுக்குள் வந்து வீற்றிருப்பதற்கு ஏற்றபடி செழுமையான இடமாக எமது நிலைக்கு ஏற்ப எமது உடலை மாற்றி அருளியவளும், அது போலவே மேலுலகம் கீழுலகம் ஆகிய இரண்டு விதமான உலகங்களையெல்லாம் அவளுக்கு ஏற்றபடி மாற்றி அவற்றுக்குத் தலைவியாகவும் இருக்கின்றவளும் ஆகிய இறைவியே, தான் வீற்றிருக்கும் எமது உடலாகவே மாறி அதற்குள் அமர்ந்து நிற்கின்றாள்.
As in verse #1252, the Goddess, who accepted our prayer and granted the solitude of union with the Lord, who is his consort, who is mother to us and to all living beings, who is ever young, and who is Manonmani, standing equally united with the Lord, transformed our own body, according to our own state, into a rich and fitting dwelling place for herself to come and abide within. And, just so, having transformed both kinds of worlds, the upper world and the lower world, to suit herself, and being their chief as well, this same Goddess has become the very body in which she dwells, and stands seated within it.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
பாடல் #1252 இல் உள்ளபடி எமது வேண்டுதலை ஏற்றுக் கொண்டு இறைவனோடு சேர்ந்து இருக்கும் ஏகாந்தத்தை அருளியவளும், இறைவனுக்குத் துணைவியாக இருக்கின்றவளும், எமக்கும் அனைத்து உயிர்களுக்கும் தாயாக இருக்கின்றவளும், என்றும் இளமையுடன் இருக்கின்றவளும், இறைவனுடன் சரிசமமாக சேர்ந்து இருக்கின்ற மனோன்மணியானவளும் ஆகிய இறைவியை,
As in verse #1252, the Goddess, who accepted our prayer and granted the solitude of union with the Lord, who is his consort, who is mother to us and to all living beings, who is ever young, and who is Manonmani, standing equally united with the Lord,
- வரி 2Line 2
எமது உடலுக்குள் வந்து வீற்றிருப்பதற்கு ஏற்றபடி செழுமையான இடமாக எமது நிலைக்கு ஏற்ப எமது உடலை மாற்றி அருளியவளும்,
transformed our own body, according to our own state, into a rich and fitting dwelling place for herself to come and abide within.
- வரி 3Line 3
அது போலவே மேலுலகம் கீழுலகம் ஆகிய இரண்டு விதமான உலகங்களையெல்லாம் அவளுக்கு ஏற்றபடி மாற்றி அவற்றுக்குத் தலைவியாகவும் இருக்கின்றவளும் ஆகிய இறைவியே,
And, just so, having transformed both kinds of worlds, the upper world and the lower world, to suit herself, and being their chief as well, this same Goddess,
- வரி 4Line 4
தான் வீற்றிருக்கும் எமது உடலாகவே மாறி அதற்குள் அமர்ந்து நிற்கின்றாள்.
has become the very body in which she dwells, and stands seated within it.
திருமந்திரம் பாடல் #1253





