தொடர்ந்து படிக்கread this section continuously
தனிநாய கன்றனோ டென்னெஞ்ச நாடிஇனியா ரிருப்பிட மேழுல கென்பர்பனியான் மலர்ந்தபைம் போதுகை யேந்திக்கனியா நினைவதென் காரண மம்மையே.
உரைmeaning
பாடல் #1251 இல் உள்ளபடி இறைவனோடு ஏகாந்தத்தில் தனித்து வீற்றிருக்கும் கிடைப்பதற்கு அரிய பேறைப் பெற்று, எமது தலைவனாகிய அவனோடு எப்போதும் ஏகாந்தத்தில் இருப்பதையே எமது நெஞ்சம் விரும்புகின்றது. இந்தப் பேறைப் பெற்று பேரின்பத்தை அனுபவித்தவர்களும் இறைவனோடு தாங்கள் ஏகாந்தத்தில் சேர்ந்து இருக்கின்ற இடம் ஏழு உலகங்களும் என்று கூறுவார்கள். இந்தப் பேற்றை யாம் பெறுவதற்குக் காரணம், பனிபடர்ந்து புத்தம் புதிதாகப் பூத்து மலர்ந்திருக்கும் வாசனை மிக்க மலர்களை கையில் ஏந்திச் சென்று, எமது அம்மையாகிய இறைவியின் மீதுள்ள பேரன்பினால் கசிந்து உருகிய உள்ளத்தோடு அவளை நினைத்து எப்போதும் வணங்கியதை அவள் ஏற்றுக் கொண்டு அருளியதால் ஆகும்.
As in verse #1251, having attained the rare fortune of dwelling alone with the Lord in solitude, our heart desires nothing but to remain in solitude with him, our chief, forever. Those too who have attained this fortune and experienced supreme bliss declare that the place where they dwell united with the Lord in solitude is the seven worlds themselves. The reason we obtain this fortune is that, carrying in hand fragrant, freshly-blossomed flowers still wet with dew, and with a heart melted by great love for our Mother the Goddess, we thought of her and worshipped her always, and she accepted that and granted her grace.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
பாடல் #1251 இல் உள்ளபடி இறைவனோடு ஏகாந்தத்தில் தனித்து வீற்றிருக்கும் கிடைப்பதற்கு அரிய பேறைப் பெற்று, எமது தலைவனாகிய அவனோடு எப்போதும் ஏகாந்தத்தில் இருப்பதையே எமது நெஞ்சம் விரும்புகின்றது.
As in verse #1251, having attained the rare fortune of dwelling alone with the Lord in solitude, our heart desires nothing but to remain in solitude with him, our chief, forever.
- வரி 2Line 2
இந்தப் பேறைப் பெற்று பேரின்பத்தை அனுபவித்தவர்களும் இறைவனோடு தாங்கள் ஏகாந்தத்தில் சேர்ந்து இருக்கின்ற இடம் ஏழு உலகங்களும் என்று கூறுவார்கள்.
Those too who have attained this fortune and experienced supreme bliss declare that the place where they dwell united with the Lord in solitude is the seven worlds themselves.
- வரி 3Line 3
இந்தப் பேற்றை யாம் பெறுவதற்குக் காரணம், பனிபடர்ந்து புத்தம் புதிதாகப் பூத்து மலர்ந்திருக்கும் வாசனை மிக்க மலர்களை கையில் ஏந்திச் சென்று,
The reason we obtain this fortune is that, carrying in hand fragrant, freshly-blossomed flowers still wet with dew,
- வரி 4Line 4
எமது அம்மையாகிய இறைவியின் மீதுள்ள பேரன்பினால் கசிந்து உருகிய உள்ளத்தோடு அவளை நினைத்து எப்போதும் வணங்கியதை அவள் ஏற்றுக் கொண்டு அருளியதால் ஆகும்.
and with a heart melted by great love for our Mother the Goddess, we thought of her and worshipped her always, and she accepted that and granted her grace.
திருமந்திரம் பாடல் #1252





