தொடர்ந்து படிக்கread this section continuously
உணர்ந்தொழிந் தேனுவ னாமெங்க ளீசன்புணர்ந்தொழிந் தேன்புவ னாபதி யாரைஅணைந்தொழிந் தேனெங்க ளாதிதன் பாதம்பிணைந்தொழிந் தேன்தன் னருள்பெற்ற வாறே.
உரைmeaning
பாடல் #1249 இல் உள்ளபடி எமக்குள் ஆதாரமாக இருக்கின்ற இறைவனின் திருவடிகளை உணர்ந்து மாயையை ஒழித்து, பலவிதமான பெயர்களால் அழைக்கப்படுகின்ற பரம்பொருள் ஒருவனே என்பதை உணர்ந்து கொண்டேன். அவனோடு ஒன்றாகக் கலந்து நின்று நான் எனும் அகங்காரத்தை ஒழித்தேன். அனைத்து உலகங்களுக்கும் அதிபதியாக இருக்கின்ற அவனோடு ஒன்றாகச் சேர்ந்து நின்று அவனது திருவடிகளைத் தவிர வேறு பற்றுக்கள் அனைத்தையும் ஒழித்தேன். அவனோடு பின்னிப் பிணைந்து என்னையே நான் ஒழித்துவிட்டேன். ஆதலால் யானும் இறைவனும் ஒன்றே எனும் திருவருளை யாம் பெற்ற வழி இதுவே.
As in verse #1249, having realized the sacred feet of the Lord who is our support within, and having destroyed maya, I came to realize that the Supreme, called by many different names, is one alone. Uniting and standing merged as one with him, I destroyed the ego called I. Standing joined as one with him, who is sovereign over all the worlds, I destroyed every attachment besides his sacred feet. Interwoven and bound with him, I destroyed my very self. This, then, is the way by which we received the grace that I and the Lord are one.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
பாடல் #1249 இல் உள்ளபடி எமக்குள் ஆதாரமாக இருக்கின்ற இறைவனின் திருவடிகளை உணர்ந்து மாயையை ஒழித்து, பலவிதமான பெயர்களால் அழைக்கப்படுகின்ற பரம்பொருள் ஒருவனே என்பதை உணர்ந்து கொண்டேன்.
As in verse #1249, having realized the sacred feet of the Lord who is our support within, and having destroyed maya, I came to realize that the Supreme, called by many different names, is one alone.
- வரி 2Line 2
அவனோடு ஒன்றாகக் கலந்து நின்று நான் எனும் அகங்காரத்தை ஒழித்தேன்.
Uniting and standing merged as one with him, I destroyed the ego called I.
- வரி 3Line 3
அனைத்து உலகங்களுக்கும் அதிபதியாக இருக்கின்ற அவனோடு ஒன்றாகச் சேர்ந்து நின்று அவனது திருவடிகளைத் தவிர வேறு பற்றுக்கள் அனைத்தையும் ஒழித்தேன்.
Standing joined as one with him, who is sovereign over all the worlds, I destroyed every attachment besides his sacred feet.
- வரி 4Line 4
அவனோடு பின்னிப் பிணைந்து என்னையே நான் ஒழித்துவிட்டேன். ஆதலால் யானும் இறைவனும் ஒன்றே எனும் திருவருளை யாம் பெற்ற வழி இதுவே.
Interwoven and bound with him, I destroyed my very self. This, then, is the way by which we received the grace that I and the Lord are one.
திருமந்திரம் பாடல் #1250





