தொடர்ந்து படிக்கread this section continuously
மாயம் புணர்க்கும் வளர்சடை யானடித்தாயம் புணர்க்குஞ் சலந்தீ யமலனைக்காயம் புணர்க்குங் கலவியுள் மாசத்திஆயம் புணர்க்குமவ் வியோனியு மாமே.
உரைmeaning
அசையா சக்தியாகிய இறைவனுக்குள் அண்ட சராசரங்களையும் அதிலிருக்கும் அனைத்து உலகங்களையும் அதற்குள் அனைத்து உயிர்களையும் படைக்க வேண்டும் என்கிற எண்ணம் வரும் போது, அவரிடமிருந்து அசையும் சக்தியாகப் பிரிந்து வருகின்ற இறைவியின் மாயா அம்சத்தோடு உலகங்களும் உயிர்களும் உருவாக வேண்டும் என்ற காரணத்திற்காக நீண்ட சடையை உடைய மாசற்ற இறைவன் சேருகின்றான். தம்மை அறிந்து அடைய வேண்டும் என்று ஆசைப்படுகின்ற உயிர்களுக்கு அருள வேண்டும் என்கிற பெருங்கருணையில், உயிர்களின் உடலை பஞ்ச பூதங்களிலுள்ள நீரையும் நெருப்பையும் கலந்து உருவாக்கும் போது தமது திருவடியையும் சேர்த்தே வைத்து உருவாக்கி அருளுகின்றான். உயிர்கள் பிறவி எடுப்பதற்கு தேவையான உடலை உருவாக்க வேண்டி இறைவனுடன் சேர்ந்து கலக்கின்ற பராசக்தியாகிய இறைவியும், தங்களின் கலப்புக்குள்ளிருந்து பலவித உருவங்களோடு உயிர்கள் அனைத்தையும் ஒரு மாபெரும் கூட்டமாக உலகங்கள் அனைத்திலும் சேர்ந்து பிறப்பதற்கு மாபெரும் காரணமாக இருக்கின்றாள்.
Within the Lord, who is the unmoving Shakti, when the thought arises that he must create the universe with its moving and unmoving things, all the worlds within it, and all the living beings within them, the pure Lord who bears the long, growing matted locks unites so that, together with the maya aspect of the Goddess who comes forth from him, parting as the moving Shakti, the worlds and the living beings may come into being. Out of the great compassion of wishing to grant grace to the souls who desire to know and attain him, when he forms the bodies of souls by mixing the water and the fire among the five elements, he places his own sacred feet together with them and creates and grants that grace. And the Goddess, who is Parasakthi and who unites with the Lord to form the body that souls need in order to take birth, is herself, out of that union, the great cause for all the souls, in their many kinds of forms, to be born together as one vast assembly in all the worlds.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
அசையா சக்தியாகிய இறைவனுக்குள் அண்ட சராசரங்களையும் அதிலிருக்கும் அனைத்து உலகங்களையும் அதற்குள் அனைத்து உயிர்களையும் படைக்க வேண்டும் என்கிற எண்ணம் வரும் போது, அவரிடமிருந்து அசையும் சக்தியாகப் பிரிந்து வருகின்ற இறைவியின் மாயா அம்சத்தோடு உலகங்களும் உயிர்களும் உருவாக வேண்டும் என்ற காரணத்திற்காக நீண்ட சடையை உடைய மாசற்ற இறைவன் சேருகின்றான்.
Within the Lord, who is the unmoving Shakti, when the thought arises that he must create the universe with its moving and unmoving things, all the worlds within it, and all the living beings within them, the pure Lord who bears the long, growing matted locks unites so that, together with the maya aspect of the Goddess who comes forth from him, parting as the moving Shakti, the worlds and the living beings may come into being.
- வரி 2Line 2
தம்மை அறிந்து அடைய வேண்டும் என்று ஆசைப்படுகின்ற உயிர்களுக்கு அருள வேண்டும் என்கிற பெருங்கருணையில், உயிர்களின் உடலை பஞ்ச பூதங்களிலுள்ள நீரையும் நெருப்பையும் கலந்து உருவாக்கும் போது தமது திருவடியையும் சேர்த்தே வைத்து உருவாக்கி அருளுகின்றான்.
Out of the great compassion of wishing to grant grace to the souls who desire to know and attain him, when he forms the bodies of souls by mixing the water and the fire among the five elements, he places his own sacred feet together with them and creates and grants that grace.
- வரி 3Line 3
உயிர்கள் பிறவி எடுப்பதற்கு தேவையான உடலை உருவாக்க வேண்டி இறைவனுடன் சேர்ந்து கலக்கின்ற பராசக்தியாகிய இறைவியும்,
And the Goddess, who is Parasakthi and who unites with the Lord to form the body that souls need in order to take birth,
- வரி 4Line 4
தங்களின் கலப்புக்குள்ளிருந்து பலவித உருவங்களோடு உயிர்கள் அனைத்தையும் ஒரு மாபெரும் கூட்டமாக உலகங்கள் அனைத்திலும் சேர்ந்து பிறப்பதற்கு மாபெரும் காரணமாக இருக்கின்றாள்.
is herself, out of that union, the great cause for all the souls, in their many kinds of forms, to be born together as one vast assembly in all the worlds.
திருமந்திரம் பாடல் #1249





