தொடர்ந்து படிக்கread this section continuously
உருவம் பலவுயி ராய்வல்ல நந்திதெருவம் புகுந்தமை தேர்வுற நாடிப்புரிவளைக் கைச்சியெம் பொன்னணி மாதைமருவி யிறைவன் மகிழ்வன மாயமே.
உரைmeaning
பல்வேறு விதமான உயிர்களில் அந்தந்த உருவமாகவே இருக்கும் வல்லமையை உடையவனும், பாடல் #1247 இல் உள்ளபடி இறைவியைத் தொடர்ந்து கொண்டே இருக்கின்ற சாதகருக்குள் பாம்பும் கங்கையையும் அணிந்து இருக்கின்றவனும் ஆகிய இறைவனை, தமக்குள் ஆராய்ந்து தேடிப் பார்த்து உணர்ந்து கொண்டால், அவனே குருநாதகராக வீற்றிருந்து பலவிதமான செயல்களைப் புரிந்து அருளுவான். அழகிய வளையல்களை அணிந்த திருக்கைகளையும் தங்க அணிகலன்களை முழுவதும் அணிந்திருக்கும் திருமேனியையும் உடைய இறைவியாகவே தான் மாறி இருக்கும் திருக்கோலத்தைக் காட்டி அருளுவதை பேரின்பத்தோடு பார்த்தால், அது ஒரு மாபெரும் அதிசயமாகவே இருக்கின்றது.
The Lord has the power to take on that very form amid the many different kinds of living beings, and, within the seeker who continues to follow the Goddess as told in verse #1247, wears both the serpent and the Ganges. If one searches for him, examines him and realizes him within oneself, he himself takes his seat as the guru and performs manifold deeds of grace. If, with supreme bliss, one then sees him graciously showing the sacred form into which he himself has changed, as the Goddess, with beautiful bangled sacred hands and a body wholly adorned in golden ornaments, that is itself a very great wonder.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
பல்வேறு விதமான உயிர்களில் அந்தந்த உருவமாகவே இருக்கும் வல்லமையை உடையவனும், பாடல் #1247 இல் உள்ளபடி இறைவியைத் தொடர்ந்து கொண்டே இருக்கின்ற சாதகருக்குள் பாம்பும் கங்கையையும் அணிந்து இருக்கின்றவனும் ஆகிய இறைவனை,
The Lord has the power to take on that very form amid the many different kinds of living beings, and, within the seeker who continues to follow the Goddess as told in verse #1247, wears both the serpent and the Ganges.
- வரி 2Line 2
தமக்குள் ஆராய்ந்து தேடிப் பார்த்து உணர்ந்து கொண்டால்,
If one searches for him, examines him and realizes him within oneself,
- வரி 3Line 3
அவனே குருநாதகராக வீற்றிருந்து பலவிதமான செயல்களைப் புரிந்து அருளும் அழகிய வளையல்களை அணிந்த திருக்கைகளையும் தங்க அணிகலன்களை முழுவதும் அணிந்திருக்கும் திருமேனியையும் உடைய இறைவியாகவே தான் மாறி இருக்கும் திருக்கோலத்தைக் காட்டி அருளுவதை,
he himself takes his seat as the guru, and performs manifold deeds of grace, and shows the sacred form into which he himself has changed, as the Goddess, with beautiful bangled sacred hands and a body wholly adorned in golden ornaments,
- வரி 4Line 4
பேரின்பத்தோடு பார்த்தால் ஒரு மாபெரும் அதிசயமாகவே இருக்கின்றது.
and if one sees that with supreme bliss, it is itself a very great wonder.
திருமந்திரம் பாடல் #1248





