திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1247

நான்காம் தந்திரம்8. ஆதார ஆதேயம்

தொடர்ந்து படிக்கread this section continuously

தொடங்கி யுலகினிற் சோதி மணாளன்அடங்கி இருப்பதெ னன்பின் பெருமைவிடங்கொள் பெருஞ்சடை மேல்வரு கங்கைஒடுங்கி உமையொடு மோருரு வாமே.

உரை

ஆரம்பத்திலிருந்தே உலகத்தில் எப்போதும் ஒளி வடிவான இறைவியுடன் துணையாகவே சேர்ந்திருக்கும் இறைவனே, எமது உள்ளத்திற்குள்ளும் பேரன்பின் உச்ச நிலையாக எப்போதும் வீற்றிருக்கின்றான். இந்த இறைவனே, பாடல் #1245 இல் உள்ளபடி சாதகர்கள் எப்போதும் தொடர்ந்து கொண்டே இருக்கும் இறைவிக்குள்ளும் எப்போதும் அடங்கி, ஒரே உருவமாக, தனது கழுத்தில் விஷம் கொண்ட பாம்பையும், பின்னிய நீண்ட சடையின் உச்சியில் எப்போதும் பொங்கி வழிகின்ற கங்கையையும் கொண்டு வீற்றிருக்கின்றான்.

வரி வாரியாக

  • வரி 1

    ஆரம்பத்திலிருந்தே உலகத்தில் எப்போதும் ஒளி வடிவான இறைவியுடன் துணையாகவே சேர்ந்திருக்கும் இறைவனே, எமது உள்ளத்திற்குள்ளும் பேரன்பின் உச்ச நிலையாக எப்போதும் வீற்றிருக்கின்றான்.

  • வரி 2

    இந்த இறைவனே, பாடல் #1245 இல் உள்ளபடி சாதகர்கள் எப்போதும் தொடர்ந்து கொண்டே இருக்கும் இறைவிக்குள்ளும் எப்போதும் அடங்கி இருக்கின்றான்.

  • வரி 3

    ஒரே உருவமாக, தனது கழுத்தில் விஷம் கொண்ட பாம்பையும் கொண்டு அவன் வீற்றிருக்கின்றான்.

  • வரி 4

    பின்னிய நீண்ட சடையின் உச்சியில் எப்போதும் பொங்கி வழிகின்ற கங்கையையும் கொண்டு அவன் வீற்றிருக்கின்றான்.

திருமந்திரம் பாடல் #1247

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout