திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1246

நான்காம் தந்திரம்8. ஆதார ஆதேயம்

தொடர்ந்து படிக்கread this section continuously

விளங்கொளி யாய விரிசுடர் மாலைதுளங்கு பராசத்தி தூங்கிருள் நீங்கக்களங்கொள் மணியுடன் காம வினோதம்உளங்கொ ளிலம்பிய மொன்று தொடரே.

உரை

பாடல் #1245 இல் உள்ளபடி, சாதகர்கள் தமக்குள் விளங்கிக்கொண்ட பேரொளியாக இருக்கும் இறைவியானவள், தனது கழுத்தில் எப்போதும் பிரகாசமாக ஒளி வீசுகின்ற மணி மாலையை அணிந்திருக்கின்றாள். உயிர்களுக்குள் மிகுதியாக இருக்கும் ஆணவ மலம் நீங்கி, அவர்கள் தாம் யார் என்பதை உண்மையாக உணர வேண்டும் என்பதற்காக, நீல நிறக் கழுத்துடன் இருக்கும் இறைவனோடு மிகுந்த அன்பு கொண்டு அவருடன் சேர்ந்திருந்து, ஆணவ மலங்களை நீக்கி அருளுகின்றாள். கிடைப்பதற்கு அரிய அந்தப் பெரும் பேற்றை நீங்களும் அடைய வேண்டுமானால், இறைவியோடு தியானத்தில் எப்போதும் ஒன்றி இருந்து அவளைத் தொடர்ந்து கொண்டே இருங்கள்.

வரி வாரியாக

  • வரி 1

    சாதகர்கள் தமக்குள் விளங்கிக்கொண்ட பேரொளியாக இருக்கும் இறைவியானவள், தனது கழுத்தில் எப்போதும் பிரகாசமாக ஒளி வீசுகின்ற மணி மாலையை அணிந்திருக்கின்றாள்.

  • வரி 2

    உயிர்களுக்குள் மிகுதியாக இருக்கும் ஆணவ மலம் நீங்கி, அவர்கள் தாம் யார் என்பதை உண்மையாக உணர வேண்டும் என்பதற்காக,

  • வரி 3

    நீல நிறக் கழுத்துடன் இருக்கும் இறைவனோடு மிகுந்த அன்பு கொண்டு அவருடன் சேர்ந்திருந்து, ஆணவ மலங்களை நீக்கி அருளுகின்றாள்.

  • வரி 4

    கிடைப்பதற்கு அரிய அந்தப் பெரும் பேற்றை நீங்களும் அடைய வேண்டுமானால், இறைவியோடு தியானத்தில் எப்போதும் ஒன்றி இருந்து அவளைத் தொடர்ந்து கொண்டே இருங்கள்.

திருமந்திரம் பாடல் #1246

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout