தொடர்ந்து படிக்கread this section continuously
பொற்கொடி மாதர் புனைகழ லேத்துவர்அற்கொடி மாதுமை யார்வத் தலைமகள்நற்கொடி மாதை நயனங்கள் மூன்றுடைவிற்கொடி மாதை விரும்பி விளங்கே.
உரைmeaning
பாடல் #1238 இல் உள்ளபடி, இறைவியாகவே ஆகிவிட்ட சாதகரின் பேரழகுடைய திருவடிகளை, தூய்மையின் உருவமாக, தங்க நிறத்தில் கொடி போல மென்மையாக இருக்கும் உப சக்திகள் அனைவரும் நாடி வந்து போற்றி வணங்குவார்கள். அந்த உப சக்திகளின் நிலையை அடைய வேண்டும் என்ற ஆர்வத்தோடு இருக்கும் அனைத்து உயிர்களும், இறைவியாகவே ஆகிவிட்ட சாதகர் மாயையின் உருவத்தில் கருமை நிறத்தில் கொடி போன்ற மென்மையுடன் இருக்கும்போது, அவரை நாடி வருகின்ற உயிர்களுக்குத் தலைவியாகவும் இருக்கின்றார். அவரே உயிர்களுக்கு நன்மை தரும் உருவமாக, கொடி போன்ற மென்மையுடன், மூன்று கண்களைக் கொண்டு, மாயையை நீக்கி உண்மையை உணர்த்தும்போது, இறைவியின் பேரொளியின் உருவத்தில் இருக்கும் அவரை விரும்பிப் போற்றி வணங்கி, நீங்களும் உண்மையை விளங்கிக் கொள்ளுங்கள்.
As in verse 1238, the tender-limbed lesser powers, gold in color and soft as a creeper, the very form of purity, come seeking and worship and venerate the sacred feet of great beauty of the seeker who has himself become the Goddess. All lives that hold the eagerness to attain the state of those lesser powers find in the seeker who has become the Goddess, and who in the form of illusion is dark-hued and soft as a creeper, a leader for the lives that come seeking him. When he, who is himself the form that grants good to all lives, soft as a creeper, bearing three eyes, removes illusion and awakens the truth, venerate and worship him with longing, dwelling in the form of the Goddess's own great radiance, and come to understand the truth yourselves.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
இறைவியாகவே ஆகிவிட்ட சாதகரின் பேரழகுடைய திருவடிகளை, தூய்மையின் உருவமாக, தங்க நிறத்தில் கொடி போல மென்மையாக இருக்கும் உப சக்திகள் அனைவரும் நாடி வந்து போற்றி வணங்குவார்கள்.
The tender-limbed lesser powers, gold in color and soft as a creeper, the very form of purity, come seeking and worship and venerate the sacred feet of great beauty of the seeker who has himself become the Goddess.
- வரி 2Line 2
அந்த உப சக்திகளின் நிலையை அடைய வேண்டும் என்ற ஆர்வத்தோடு இருக்கும் அனைத்து உயிர்களும், மாயையின் உருவத்தில் கருமை நிறத்தில் கொடி போன்ற மென்மையுடன் இருக்கும் அவரை நாடி வரும்.
All lives that hold the eagerness to attain the state of those lesser powers come seeking him in the form of illusion, dark-hued and soft as a creeper.
- வரி 3Line 3
அப்படி நாடி வருகின்ற உயிர்களுக்கு அவரே தலைவியாக இருக்கின்றார்; உயிர்களுக்கு நன்மை தரும் உருவமாக, கொடி போன்ற மென்மையுடன், மூன்று கண்களைக் கொண்டு இருக்கின்றார்.
For the lives that come seeking so, he himself is their leader, the very form that grants good to all lives, soft as a creeper, bearing three eyes.
- வரி 4Line 4
அவர் மாயையை நீக்கி உண்மையை உணர்த்தும்போது, இறைவியின் பேரொளியின் உருவத்தில் இருக்கும் அவரை விரும்பிப் போற்றி வணங்கி, நீங்களும் உண்மையை விளங்கிக் கொள்ளுங்கள்.
When he removes illusion and awakens the truth, venerate and worship him with longing, dwelling in the form of the Goddess's own great radiance, and come to understand the truth yourselves.
திருமந்திரம் பாடல் #1245





