திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1244

நான்காம் தந்திரம்8. ஆதார ஆதேயம்

தொடர்ந்து படிக்கread this section continuously

தாங்கி யுலகிற் தரித்த பராபரன்ஓங்கிய காலத் தொருவ னுலப்பிலிபூங்கிளி தங்கும் புரிகுழ லாளன்றுபாங்குட னேற்பப் பராசத்தி போற்றே.

உரை

பாடல் #1243 இல் உள்ளபடி, உயிர்களுக்குள்ளும் சோதியாக வீற்றிருக்கும் பரம்பொருளான இறைவன், அண்ட சராசரங்களையும் தாங்கி நின்று, அதிலிருக்கும் அனைத்து உலகங்களாகவும் அதிலிருக்கும் அனைத்துப் பொருட்களாகவும் இருக்கின்றான். அனைத்தும் அழிந்துபோகின்ற பேரூழிக் காலத்திலும் கூடத் தான் ஒருவன் மட்டும் எப்போதும் அழியாமல் இருக்கின்றான். பசுமையான கிளியைத் தனது திருக்கையில் ஏந்திக்கொண்டு, சுருண்ட அழகிய கூந்தலை உடைய இறைவியானவள், அப்போதும் இறைவனின் மேன்மையான நிலைக்கு ஏற்பவே தாமும் அவனுடன் சரிசமமான பாகமாகக் கலந்து நின்று, இருவரும் சேர்ந்திருக்கும் தன்மையில் பராசக்தியாக இருக்கின்றாள். ஒன்றாகச் சேர்ந்திருக்கும் இவர்கள் இருவரையும் போற்றி வழிபடுங்கள்.

வரி வாரியாக

  • வரி 1

    உயிர்களுக்குள்ளும் சோதியாக வீற்றிருக்கும் பரம்பொருளான இறைவன், அண்ட சராசரங்களையும் தாங்கி நின்று, அதிலிருக்கும் அனைத்து உலகங்களாகவும் அனைத்துப் பொருட்களாகவும் இருக்கின்றான்.

  • வரி 2

    அனைத்தும் அழிந்துபோகின்ற பேரூழிக் காலத்திலும் கூடத் தான் ஒருவன் மட்டும் எப்போதும் அழியாமல் இருக்கின்றான்.

  • வரி 3

    பசுமையான கிளியைத் தனது திருக்கையில் ஏந்திக்கொண்டு, சுருண்ட அழகிய கூந்தலை உடைய இறைவியானவள், அப்போதும் இறைவனின் மேன்மையான நிலைக்கு ஏற்பவே தாமும் அவனுடன் சரிசமமான பாகமாகக் கலந்து நிற்பாள்.

  • வரி 4

    இருவரும் சேர்ந்திருக்கும் தன்மையில் அவள் பராசக்தியாக இருக்கின்றாள். ஒன்றாகச் சேர்ந்திருக்கும் இவர்கள் இருவரையும் போற்றி வழிபடுங்கள்.

திருமந்திரம் பாடல் #1244

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout