தொடர்ந்து படிக்கread this section continuously
நவிற்றுநன் மந்திரம் நன்மலர் தூபங்கவற்றிய கந்தங் கவர்ந்தெரி தீபம்பயிற்று முலகினிற் பார்ப்பதி பூசைஅவிக்கொண்ட சோதிக்கோர் அர்ச்சனை தானே.
உரைmeaning
பாடல் #1242 இல் உள்ளபடி, இறைவனையும் இறைவியையும் சாதகர் அடைந்ததைப் போலவே தாங்களும் சென்று அடைவதற்கான வழியைச் சொல்லி அருளுமாறு வேண்டிக்கொண்டவர்களுக்கு, அவர் கூறிய வழியாவது, மனதையும் ஐந்து புலன்களையும் அடக்கி வைத்து, எண்ணங்கள் முழுவதையும் தூய்மைப்படுத்தி, வேத ஆகமங்கள் அருளிய முறைப்படி, இந்த உலக வாழ்க்கையிலேயே அனைத்து உலகங்களுக்கும் தலைவனாகிய இறைவனுக்குப் பூசை செய்யுங்கள். அனைத்து உயிர்களுக்குள்ளும் சோதியாக வீற்றிருக்கும் அந்த இறைவனுக்கு அர்ச்சனை செய்யுங்கள். இறைவனையும் இறைவியையும் சென்று அடையும் வழி இதுவே என்று அருளுகின்றார்.
As in verse 1242, to those who begged him to graciously tell them the way by which they too may go and reach the Lord and the Goddess as he himself did, the way he graciously gave is this: restrain the mind and the five senses, purify every thought completely, and, following the manner graciously given by the Vedas and Agamas, worship the Lord who is master of all the worlds, in this very worldly life. Offer archana to that Lord who dwells as light within every life. This, he graciously declares, is the way to go and reach the Lord and the Goddess.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
இறைவனையும் இறைவியையும் சாதகர் அடைந்ததைப் போலவே தாங்களும் சென்று அடைவதற்கான வழியைச் சொல்லி அருளுமாறு வேண்டிக்கொண்டவர்களுக்கு, அவர் கூறிய வழியாவது,
To those who begged him to graciously tell them the way by which they too may go and reach the Lord and the Goddess as he himself did, the way he graciously gave is this:
- வரி 2Line 2
மனதையும் ஐந்து புலன்களையும் அடக்கி வைத்து, எண்ணங்கள் முழுவதையும் தூய்மைப்படுத்துங்கள்.
Restrain the mind and the five senses, and purify every thought completely.
- வரி 3Line 3
வேத ஆகமங்கள் அருளிய முறைப்படி, இந்த உலக வாழ்க்கையிலேயே அனைத்து உலகங்களுக்கும் தலைவனாகிய இறைவனுக்குப் பூசை செய்யுங்கள்.
Following the manner graciously given by the Vedas and Agamas, worship the Lord who is master of all the worlds, in this very worldly life.
- வரி 4Line 4
அனைத்து உயிர்களுக்குள்ளும் சோதியாக வீற்றிருக்கும் அந்த இறைவனுக்கு அர்ச்சனை செய்யுங்கள். இதுவே இறைவனையும் இறைவியையும் சென்று அடையும் வழி என்று அருளுகின்றார்.
Offer archana to that Lord who dwells as light within every life. This, he graciously declares, is the way to go and reach the Lord and the Goddess.
திருமந்திரம் பாடல் #1243





