திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1242

நான்காம் தந்திரம்8. ஆதார ஆதேயம்

தொடர்ந்து படிக்கread this section continuously

வந்தடி போற்றுவர் வானவர் தானவர்இந்து முதலாக எண்டிசை யோர்களுங்கொந்தணி யுங்குழ லாளொடு கோனையும்வந்தனை செய்யும் வழிநவில் வீரே.

உரை

பாடல் #1241 இல் உள்ளபடி, ஓங்காரத்தின் நாதமாகவே ஆகிவிட்ட சாதகரைத் தேடி வந்து அவரது திருவடியைப் போற்றி வணங்கி நின்று, தேவர்களும் அசுரர்களும், இந்திரன் முதலாக எட்டுத் திசைக்கும் தலைவர்களாக இருக்கின்றவர்களும், சாதகர் தமக்குள்ளேயே நறுமணம் மிக்க மலர்களைச் சூடிக்கொண்டிருக்கும் அழகிய கூந்தலைக் உடைய இறைவியையும், அவளோடு ஒன்றாகச் சேர்ந்து அனைத்திற்கும் அரசனாக இருக்கும் இறைவனையும், தமது வழிபாட்டின் மூலமே சாதகர் அடைந்ததைப் போலவே தாங்களும் சென்று அடைவதற்கான வழியைச் சொல்லி அருளுமாறு வேண்டிக் கொள்வார்கள்.

வரி வாரியாக

  • வரி 1

    ஓங்காரத்தின் நாதமாகவே ஆகிவிட்ட சாதகரைத் தேடி வந்து அவரது திருவடியைப் போற்றி வணங்கி, தேவர்களும் அசுரர்களும் நிற்பார்கள்.

  • வரி 2

    இந்திரன் முதலாக எட்டுத் திசைக்கும் தலைவர்களாக இருக்கின்றவர்களும் அப்படியே வணங்குவார்கள்.

  • வரி 3

    சாதகர் தமக்குள்ளேயே நறுமணம் மிக்க மலர்களைச் சூடிக்கொண்டிருக்கும் அழகிய கூந்தலைக் உடைய இறைவியையும், அவளோடு ஒன்றாகச் சேர்ந்து அனைத்திற்கும் அரசனாக இருக்கும் இறைவனையும்,

  • வரி 4

    தமது வழிபாட்டின் மூலமே சாதகர் அடைந்ததைப் போலவே தாங்களும் சென்று அடைவதற்கான வழியைச் சொல்லி அருளுமாறு அவர்கள் வேண்டிக் கொள்வார்கள்.

திருமந்திரம் பாடல் #1242

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout