திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1241

நான்காம் தந்திரம்8. ஆதார ஆதேயம்

தொடர்ந்து படிக்கread this section continuously

ஆமயன் மாலர னீசன்மா லாங்கதிஓமய மாகிய வொன்பது மொன்றிடத்தேமய னாளுந் தெனாதென வென்றிடும்மாமய மானது வந்தெய்த லாமே.

உரை

பாடல் #1240 இல் உள்ளபடி, அம்மை அப்பராகிய இறைவனும் இறைவியும் தாமும் ஒன்றாகச் சேர்ந்து அவர்களுக்குள்ளேயே அடங்கி பேரின்பத்தில் இருக்கும் சாதகர்கள், தமக்குள் இருக்கும் ஒன்பது மண்டலங்களிலும் ஓங்கார மந்திரத்தின் நாதமாகவே ஆகிவிட்ட ஒன்பது தெய்வங்களோடும் தாமும் சேர்ந்து, ஓங்காரத்தின் நாதத் தன்மை பெற்றுவிடுவார். அதன்பிறகு, தனக்குப் பிடித்த வகையான தேன் இருக்கும் பூவைத் தேடி மொய்த்து, அதிலிருக்கும் தேனை உறிஞ்சிக் குடித்து இன்பத்தில் திளைத்திருக்கும் தேனீக்களைப் போல, சாதகரும் தமக்குக் கிடைக்கப் பெற்ற ஓங்காரத்தின் நாதத் தன்மையில் கிடைக்கும் பேரின்பத்திலேயே திளைத்திருப்பார்.

வரி வாரியாக

  • வரி 1

    அம்மை அப்பராகிய இறைவனும் இறைவியும் தாமும் ஒன்றாகச் சேர்ந்து அவர்களுக்குள்ளேயே அடங்கி பேரின்பத்தில் இருக்கும் சாதகர்கள்,

  • வரி 2

    தமக்குள் இருக்கும் ஒன்பது மண்டலங்களிலும் ஓங்கார மந்திரத்தின் நாதமாகவே ஆகிவிட்ட ஒன்பது தெய்வங்களோடும் தாமும் சேர்ந்து, ஓங்காரத்தின் நாதத் தன்மை பெற்றுவிடுவார்.

  • வரி 3

    தனக்குப் பிடித்த வகையான தேன் இருக்கும் பூவைத் தேடி மொய்த்து, அதிலிருக்கும் தேனை உறிஞ்சிக் குடித்து இன்பத்தில் திளைத்திருக்கும் தேனீக்களைப் போல,

  • வரி 4

    சாதகரும் தமக்குக் கிடைக்கப் பெற்ற ஓங்காரத்தின் நாதத் தன்மையில் கிடைக்கும் பேரின்பத்திலேயே திளைத்திருப்பார்.

திருமந்திரம் பாடல் #1241

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout