தொடர்ந்து படிக்கread this section continuously
நெறியது வாய்நின்ற நேரிழை யாளைப்பிறிவது செய்யாது பிஞ்ஞக னோடுங்குறியது கூடிக் குறிக்கொண்டு நோக்கும்அறிவொடு மாங்கே யடங்கிட லாமே.
உரைmeaning
பாடல் #1239 இல் உள்ளபடி, சாதகர்கள் செல்கின்ற மேன்மையான வழியாகவே ஆகி, அவரது வழிகளுக்குத் தகுதியான அணிகலன்களை அணிந்து கொண்டு நிற்கின்ற இறைவியை, எப்போதும் இறைவனை விட்டுத் தனியாகப் பிரித்து வைத்து நினைக்காமல், பிண்ணிய சடைமுடியில் கங்கையையும் பிறை நிலவையும் சூடியிருக்கும் இறைவனுடனே இறைவியை ஒன்றாகச் சேர்த்து வைத்து, எப்போதும் அதையே குறிக்கோளாகக் கொண்டு, தமது எண்ணங்கள் அனைத்தையும் ஒன்றாகச் சேர்ந்திருக்கும் அவர்களின் மேல் வைத்துத் தியானிக்கும் சாதகர்கள், அம்மை அப்பராகிய அவர்கள் இருவரோடும் தாமும் ஒன்றாகச் சேர்ந்து, அவர்களுக்குள்ளேயே அடங்கி, பேரின்பத்தில் இருப்பார்கள்.
As in verse 1239, seekers who never think of the Goddess, who has herself become the exalted way they travel and wears ornaments fitting that way, as separate and apart from the Lord, but instead hold the Goddess joined always as one with the Lord who wears the Ganga and the crescent moon in his matted locks, and who keep that union as their constant aim, meditating with all their thoughts fixed upon the two of them joined together, come themselves to join as one with Amma and Appa, the Goddess and the Lord, and, absorbed within them, dwell in supreme bliss.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
சாதகர்கள் செல்கின்ற மேன்மையான வழியாகவே ஆகி, அவரது வழிகளுக்குத் தகுதியான அணிகலன்களை அணிந்து கொண்டு நிற்கின்ற இறைவியை எப்போதும் இறைவனை விட்டுத் தனியாகப் பிரித்து வைத்து நினைக்காமல்,
Never thinking of the Goddess, who has herself become the exalted way they travel and wears ornaments fitting that way, as separate and apart from the Lord,
- வரி 2Line 2
பிண்ணிய சடைமுடியில் கங்கையையும் பிறை நிலவையும் சூடியிருக்கும் இறைவனுடனே இறைவியை ஒன்றாகச் சேர்த்து வைத்து,
but instead holding the Goddess joined always as one with the Lord who wears the Ganga and the crescent moon in his matted locks,
- வரி 3Line 3
எப்போதும் அதையே குறிக்கோளாகக் கொண்டு, தமது எண்ணங்கள் அனைத்தையும் ஒன்றாகச் சேர்ந்திருக்கும் அவர்களின் மேல் வைத்துத் தியானிக்கும் சாதகர்கள்,
and keeping that union as their constant aim, meditating with all their thoughts fixed upon the two of them joined together,
- வரி 4Line 4
அம்மை அப்பராகிய அவர்கள் இருவரோடும் தாமும் ஒன்றாகச் சேர்ந்து, அவர்களுக்குள்ளேயே அடங்கி, பேரின்பத்தில் இருப்பார்கள்.
come themselves to join as one with Amma and Appa, the Goddess and the Lord, and, absorbed within them, dwell in supreme bliss.
திருமந்திரம் பாடல் #1240





