தொடர்ந்து படிக்கread this section continuously
ஆயு மறிவுங் கடந்தணு வாரணிமாயம தாகி மதோமகி யாயிடுஞ்சேய அரிவை சிவானந்த சுந்தரிநேயமது ஆய்நெறி யாகிநின் றாளே.
உரைmeaning
பாடல் #1238 இல் உள்ளபடி, இறைவியாகவே ஆகிவிட்ட சாதகர்கள் நுண்ணியதாக அறியும் அறிவையும் தாண்டிய நிலையில், அணுவுக்குள் அணுவாகவும் மாயையாகவும் ஆகி நின்று, அனைத்திற்கும் மேன்மையான பெருமையை உடையவளாகவும் இருக்கின்றாள். சிவந்த நிறத்தோடு, என்றும் இளமையுடன், பேரானந்தத்திற்கும் மேலான சிவானந்தமாகவே இருக்கும் அவளே, பேரழகுடன் பேரன்பின் வடிவமாகவே ஆகி, சாதகர் செல்கின்ற மேன்மையான வழியாகவும் ஆகி நிற்கின்றாள்.
As in verse 1238, in the state beyond even the subtle knowing knowledge, seekers who have themselves become the Goddess find her as the atom within the atom, as illusion, and as one who holds a greatness exalted above all. With a reddish hue, forever youthful, she is Sivananda itself, higher even than supreme bliss, and she, becoming the very form of great love with great beauty, also stands as the exalted way by which the seeker travels.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
இறைவியாகவே ஆகிவிட்ட சாதகர்கள் நுண்ணியதாக அறியும் அறிவையும் தாண்டிய நிலையில், அணுவுக்குள் அணுவாகவும் மாயையாகவும் ஆகி நிற்கின்றாள்.
In the state beyond even the subtle knowing knowledge, seekers who have themselves become the Goddess find her as the atom within the atom, and as illusion.
- வரி 2Line 2
அவளே அனைத்திற்கும் மேன்மையான பெருமையை உடையவளாகவும் இருக்கின்றாள்.
She holds a greatness exalted above all.
- வரி 3Line 3
சிவந்த நிறத்தோடு, என்றும் இளமையுடன், பேரானந்தத்திற்கும் மேலான சிவானந்தமாகவே அவளே இருக்கின்றாள்.
With a reddish hue, forever youthful, she is Sivananda itself, higher even than supreme bliss.
- வரி 4Line 4
பேரழகுடன் பேரன்பின் வடிவமாகவே ஆகி, சாதகர் செல்கின்ற மேன்மையான வழியாகவும் அவளே ஆகி நிற்கின்றாள்.
Becoming the very form of great love with great beauty, she also stands as the exalted way by which the seeker travels.
திருமந்திரம் பாடல் #1239





