திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1238

நான்காம் தந்திரம்8. ஆதார ஆதேயம்

தொடர்ந்து படிக்கread this section continuously

தோன்றிடும் வேண்டுரு வாகிய தூய்நெறிஈன்றிடு மாங்கவ ளெய்திய பல்கலைமான்றரு கண்ணியும் மாரனும் வந்தெதிர்சான்றது வாகுவர் தாமவ ளாயுமே.

உரை

பாடல் #1237 இல் உள்ளபடி, உலகத்தைக் கடந்து சென்ற ஆன்மாக்களின் வேண்டுகோள்களுக்குப் பொருத்தமான அருளை வழங்குவதற்குத் தேவையான ஞானங்கள் அனைத்தும் சாதகருக்குள் தானாகவே தோன்றிவிடும் போது, அப்படி வேண்டிக்கொண்ட ஆன்மாக்களின் விருப்பமான தெய்வத்தின் உருவமாகவே சாதகரும் மாறி, அவர்கள் வேண்டிக்கொண்டதை அடைவதற்கான தூய்மையான வழியைக் கொடுத்தருளும் இறைவியாகவே வீற்றிருந்து பலவிதமான செயல்களைச் செய்து அருளுகின்றார். அப்படி அருளுகின்ற போது, அழகிய மானைப் போன்ற கண்களைக் கொண்ட இறைவியும் பேரழகனாகிய இறைவனும் ஒன்றாக அவருக்கு எதிரில் வந்து வேண்டிக்கொண்ட ஆன்மாக்களுக்கு அருள் புரியும் போது, இறைவியாகவே ஆகிவிட்ட சாதகரும் அதற்குச் சாட்சியாக வீற்றிருக்கின்றார்.

வரி வாரியாக

  • வரி 1

    அப்படி வேண்டிக்கொண்ட ஆன்மாக்களின் விருப்பமான தெய்வத்தின் உருவமாகவே சாதகரும் மாறுகின்றார்.

  • வரி 2

    அவர்கள் வேண்டிக்கொண்டதை அடைவதற்கான தூய்மையான வழியைக் கொடுத்தருளும் இறைவியாகவே வீற்றிருந்து பலவிதமான செயல்களைச் செய்து அருளுகின்றார்.

  • வரி 3

    அழகிய மானைப் போன்ற கண்களைக் கொண்ட இறைவியும் பேரழகனாகிய இறைவனும் ஒன்றாக அவருக்கு எதிரில் வந்து வேண்டிக்கொண்ட ஆன்மாக்களுக்கு அருள் புரிவார்கள்.

  • வரி 4

    இறைவியாகவே ஆகிவிட்ட சாதகரும் அதற்குச் சாட்சியாக வீற்றிருக்கின்றார்.

திருமந்திரம் பாடல் #1238

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout