திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1237

நான்காம் தந்திரம்8. ஆதார ஆதேயம்

தொடர்ந்து படிக்கread this section continuously

நின்றனள் நேரிழை யாளொடு நேர்படஒன்றிய வுள்ளொளி யாலே யுணர்ந்ததுசென்ற பிராணிகள் சிந்தையில் வேண்டியதுன்றிடு ஞானங்கள் தோன்றிடுந் தானே.

உரை

பாடல் #1236 இல் உள்ளபடி, சாதகருக்குள் எப்போதும் பொருந்தி நட்சத்திரம் போன்ற பேரொளிப் பிழம்பாக நிற்கும் இறைவியானவள், தனது சக்திக்குத் தகுதியான ஆபரணங்களைச் சூடிக்கொண்டு இருக்கின்றாள். அவளோடு உண்மையான ஞானத்தில் ஒன்றாகச் சேர்ந்திருக்கும் சாதகர்கள், தங்களுக்குள் இருக்கும் இறை ஒளியின் மூலம் அவளை முழுவதுமாக உணர்ந்து கொண்டு வீற்றிருக்கும் போது, இதுவரை உலகத்தைக் கடந்து சென்ற ஆன்மாக்களின் எண்ணத்தில் அவர்கள் வேண்டிக்கொண்ட வேண்டுகோள்கள் அனைத்தும் வந்து சேரும். அப்போது அவர்களின் வேண்டுகோள்களுக்குப் பொருத்தமான அருளை வழங்குவதற்குத் தேவையான ஞானங்கள் அனைத்தும் சாதகருக்குள் தானாகவே தோன்றிவிடும்.

வரி வாரியாக

  • வரி 1

    சாதகருக்குள் எப்போதும் பொருந்தி நட்சத்திரம் போன்ற பேரொளிப் பிழம்பாக நிற்கும் இறைவியானவள், தனது சக்திக்குத் தகுதியான ஆபரணங்களைச் சூடிக்கொண்டு இருக்கின்றாள்.

  • வரி 2

    அவளோடு உண்மையான ஞானத்தில் ஒன்றாகச் சேர்ந்திருக்கும் சாதகர்கள், தங்களுக்குள் இருக்கும் இறை ஒளியின் மூலம் அவளை முழுவதுமாக உணர்ந்து கொண்டு வீற்றிருப்பார்கள்.

  • வரி 3

    இதுவரை உலகத்தைக் கடந்து சென்ற ஆன்மாக்களின் எண்ணத்தில் அவர்கள் வேண்டிக்கொண்ட வேண்டுகோள்கள் அனைத்தும் வந்து சேரும்.

  • வரி 4

    அவர்களின் வேண்டுகோள்களுக்குப் பொருத்தமான அருளை வழங்குவதற்குத் தேவையான ஞானங்கள் அனைத்தும் சாதகருக்குள் தானாகவே தோன்றிவிடும்.

திருமந்திரம் பாடல் #1237

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout