திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1236

நான்காம் தந்திரம்8. ஆதார ஆதேயம்

தொடர்ந்து படிக்கread this section continuously

என்று மெழுகின்ற ஏரினை யெய்தினார்அன்றது வாகுவர் தாழ்குழ லாளொடுமன்றரு கங்கை மதியொடு மாதவர்துன்றிய தாரகை சோதிநின் றாளே.

உரை

பாடல் #1235 இல் உள்ளபடி, எப்போதும் தெவிட்டாத அமிழ்தமாக எழுச்சியோடு இருந்துகொண்டே இருக்கும் பேரழகு வாய்ந்த இறைவியை தமக்குள் உணர்ந்து அடைந்தவர்கள், அடைந்த அந்தப் பொழுதிலேயே இறைவியாகவே ஆகிவிடுவார்கள். அவர்களோடு நீண்ட கூந்தலை உடைய இறைவியும், தீயவற்றை நீக்கித் தூய்மையைத் தருகின்ற கங்கையாகவும், குளிர்ந்த ஒளியைத் தருகின்ற நிலவாகவும், மாபெரும் தவத்தைப் புரிந்த சாதகர்களோடு எப்போதும் பொருந்தியிருக்கும் நட்சத்திரம் போன்ற பேரொளிப் பிழம்பாகவும் நிற்கின்றாள்.

வரி வாரியாக

  • வரி 1

    எப்போதும் தெவிட்டாத அமிழ்தமாக எழுச்சியோடு இருந்துகொண்டே இருக்கும் பேரழகு வாய்ந்த இறைவியை தமக்குள் உணர்ந்து அடைந்தவர்கள், அடைந்த அந்தப் பொழுதிலேயே இறைவியாகவே ஆகிவிடுவார்கள்.

  • வரி 2

    அவர்களோடு நீண்ட கூந்தலை உடைய இறைவியும் தீயவற்றை நீக்கித் தூய்மையைத் தருகின்ற கங்கையாக நிற்கின்றாள்.

  • வரி 3

    அவளே குளிர்ந்த ஒளியைத் தருகின்ற நிலவாகவும் நிற்கின்றாள்.

  • வரி 4

    மாபெரும் தவத்தைப் புரிந்த சாதகர்களோடு எப்போதும் பொருந்தியிருக்கும் நட்சத்திரம் போன்ற பேரொளிப் பிழம்பாகவும் அவளே நிற்கின்றாள்.

திருமந்திரம் பாடல் #1236

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout