தொடர்ந்து படிக்கread this section continuously
திருந்து சிவனுஞ் சிலைநுத லாளும்பொருந்திய வானவர் போற்றிசெய் தேத்தஅருந்திட அவ்விட மாரமு தாகஇருந்தனள் தானங் கிளம்பிறை யென்றே.
உரைmeaning
பாடல் #1234 இல் உள்ளபடி, தமது சிந்தனைக்குள் இருக்கும் மும்மலங்களால் ஆன அனைத்து எண்ணங்களும் நீங்கி மொத்தமும் நன்மையாகவே மாறிவிட்ட சாதகருக்குள் வீற்றிருக்கும் சிவனும், வில் போன்ற வளைந்த நெற்றியைக் கொண்ட இறைவியும், அவர்களோடு சேர்ந்து வந்து வீற்றிருக்கும் விண்ணுலகத்துத் தேவர்களும், சாதகருக்குள் இருக்கும் ஒன்றான அம்சத்தைப் புகழ்ந்து போற்றி வணங்கி வழிபட, அவர்கள் அருந்துவதற்கு அந்த இடத்திலேயே எப்போதும் தெவிட்டாத அமிழ்தமாகவும், வளர் பிறைச் சந்திரனாகவும் இறைவியே இருக்கின்றாள்.
As in verse 1234, when Shiva who dwells within the seeker whose every thought made of the three malas has departed, leaving him wholly turned to goodness, and the Goddess whose forehead is curved like a bow, and the heavenly gods who come and dwell there together with them, all praise and worship and venerate the single, united presence within the seeker, the Goddess herself is, in that very place, the ever-fresh nectar for them to drink, never turning stale, and the waxing crescent moon.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
தமது சிந்தனைக்குள் இருக்கும் மும்மலங்களால் ஆன அனைத்து எண்ணங்களும் நீங்கி மொத்தமும் நன்மையாகவே மாறிவிட்ட சாதகருக்குள் சிவனும், வில் போன்ற வளைந்த நெற்றியைக் கொண்ட இறைவியும் வீற்றிருக்கின்றனர்.
Within the seeker whose every thought made of the three malas has departed, leaving him wholly turned to goodness, dwell Shiva and the Goddess whose forehead is curved like a bow.
- வரி 2Line 2
அவர்களோடு சேர்ந்து வந்து வீற்றிருக்கும் விண்ணுலகத்துத் தேவர்களும் சாதகருக்குள் இருக்கும் ஒன்றான அம்சத்தைப் புகழ்ந்து போற்றி வணங்கி வழிபடுவார்கள்.
The heavenly gods who come and dwell there together with them all praise and worship and venerate the single, united presence within the seeker.
- வரி 3Line 3
அவர்கள் அருந்துவதற்கு அந்த இடத்திலேயே எப்போதும் தெவிட்டாத அமிழ்தமாக இறைவியே இருக்கின்றாள்.
For them to drink, in that very place, the Goddess herself is the ever-fresh nectar, never turning stale.
- வரி 4Line 4
அவளே வளர் பிறைச் சந்திரனாகவும் அங்கு இருக்கின்றாள்.
She is there too as the waxing crescent moon.
திருமந்திரம் பாடல் #1235





