திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1234

நான்காம் தந்திரம்8. ஆதார ஆதேயம்

தொடர்ந்து படிக்கread this section continuously

சத்தியி னோடு சயம்புவும் நேர்படில்வித்தது வின்றியே யெல்லாம் விளைந்தனஅத்தகை யாகிய ஐம்பத் தொருவருஞ்சித்துஅது மேவித் திருந்திடு வாரே.

உரை

பாடல் #1233 இல் உள்ளபடி, இறைவனையும் இறைவியையும் முதன்மையாகக் கொண்டு அவர்களைச் சார்ந்திருக்கும் சாதகர்கள், சத்தியத்தின் உருவமாக இருக்கும் இறைவியோடும், தாமாகவே தோன்றி எப்போதும் இருக்கும் இறைவனோடும் தாமும் ஒன்றாகச் சேர்ந்திருக்கும் உண்மையான ஞானத்தை உணர்ந்துவிட்டால், விதை போட்டால் பயிர் வளரும் என்கிற உலக நியதிக்கு எதிராக விதை போடாமலே அனைத்துப் பயிர்களும் விளைந்துவிடும் அதிசயம் போல, அனைத்து ஞானங்களும் அவர் முயற்சி செய்யாமலேயே இறையருளால் அவருக்குக் கிடைக்கப் பெறும். அது போலவே, அவருக்குள்ளிருந்து வெளிப்பட்ட ஐம்பத்தொரு எழுத்துகளும், அவற்றுக்கு அதிபதியான தேவர்களும், அவரின் சித்தத்தில் இருக்கும் சிவத்தோடு கலந்து, அவரின் சிந்தனைக்குள் இருக்கும் மும்மலங்களால் ஆன அனைத்து எண்ணங்களும் நீங்கி மொத்தமும் நன்மையாகவே அவர் மாறிவிடுவார்.

வரி வாரியாக

  • வரி 1

    இறைவனையும் இறைவியையும் முதன்மையாகக் கொண்டு அவர்களைச் சார்ந்திருக்கும் சாதகர்கள், அவர்களோடு தாமும் ஒன்றாகச் சேர்ந்திருக்கும் உண்மையான ஞானத்தை உணர்ந்துவிடின்,

  • வரி 2

    விதை போடாமலே அனைத்துப் பயிர்களும் விளைந்துவிடும் அதிசயம் போல, அனைத்து ஞானங்களும் அவர் முயற்சி செய்யாமலேயே இறையருளால் அவருக்குக் கிடைக்கப் பெறும்.

  • வரி 3

    அவருக்குள்ளிருந்து வெளிப்பட்ட ஐம்பத்தொரு எழுத்துகளும் அவற்றுக்கு அதிபதியான தேவர்களும் அவரின் சித்தத்தில் இருக்கும் சிவத்தோடு கலப்பார்கள்.

  • வரி 4

    அவரின் சிந்தனைக்குள் இருக்கும் மும்மலங்களால் ஆன அனைத்து எண்ணங்களும் நீங்கி, மொத்தமும் நன்மையாகவே அவர் மாறிவிடுவார்.

திருமந்திரம் பாடல் #1234

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout