தொடர்ந்து படிக்கread this section continuously
வென்றிட லாகும் விதிவழி தன்னையும்வென்றிட லாகும் வினைப்பெரும் பாசத்தைவென்றிட லாகும் விழைபுலன் தன்னையும்வென்றிடு மங்கைதன் மெய்யுணர் வோர்க்கே.
உரைmeaning
பாடல் #1231 இல் உள்ளபடி, இறைவனையும் இறைவியையும் உண்மையாக உணர்ந்து அவர்களைப் பணிந்து வணங்க முடிந்தவர்களால், விதி எனப்படும் அனைத்துக் கர்ம வழிகளையும், அதனால் இருக்கும் ஆணவத்தையும் மாயையையும், வினையினால் உருவாகும் பெரும் பந்தபாசத்தையும், ஆசையை உருவாக்கி மயக்குகின்ற ஐந்து புலன்களையும், அதனால் வருகின்ற ஆசைகளையும் வெல்ல முடியும்.
As in verse 1231, those who can truly realize the Lord and the Goddess and worship and venerate them are able to conquer all the ways of karma called fate, the ego and illusion that come with it, the great bond of attachment that deeds create, the five senses that stir up desire and enchant, and the desires that follow from them.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
இறைவனையும் இறைவியையும் உண்மையாக உணர்ந்து அவர்களைப் பணிந்து வணங்க முடிந்தவர்களால், விதி எனப்படும் அனைத்துக் கர்ம வழிகளையும் வெல்ல முடியும்.
Those who can truly realize the Lord and the Goddess and worship and venerate them are able to conquer all the ways of karma called fate.
- வரி 2Line 2
அதனால் இருக்கும் ஆணவத்தையும் மாயையையும், வினையினால் உருவாகும் பெரும் பந்தபாசத்தையும் வெல்ல முடியும்.
They are able to conquer the ego and illusion that come with it, and the great bond of attachment that deeds create.
- வரி 3Line 3
ஆசையை உருவாக்கி மயக்குகின்ற ஐந்து புலன்களையும் வெல்ல முடியும்.
They are able to conquer the five senses that stir up desire and enchant.
- வரி 4Line 4
அதனால் வருகின்ற ஆசைகளையும் வெல்ல முடியும், மெய்யுணர்வு பெற்றவர்களுக்கே.
They are able to conquer the desires that follow from them, and this belongs only to those who have won true realization.
திருமந்திரம் பாடல் #1232





